மேற்குவங்காளத்தில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதல்அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

மேற்குவங்காளத்தில் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதல்அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு


கொல்கத்தா,ஜூலை29, இந்தி யாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 5ஆவது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருந்த போதிலும் மக்களின் பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர் வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே 5ஆவது கட்ட ஊர டங்கு வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கரோனா பாதிப்பு இன்னும் குறை யாததால் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் கரோனாவால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேற்கு வங்காள மாநிலத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர் பாக முதல்அமைச்சர் மம்தா பானர்ஜி மூத்த அரசு அதிகாரிகளு டன் நேற்று ஆலோசனை நடத்தினார்.


மம்தா பானர்ஜி கூறியதாவது:- மாநிலம் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு ஆகஸ்டு 31-ஆம் தேதி வரை தொடரும். அதேபோல் மாநிலம் முழுவதும் வாரத்தில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அடுத்த மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.


வழக்கமாக வார இறுதி நாட் களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த மாதத்தில் பக்ரீத், சுதந்திர தினம் ஆகிய பொது விடுமுறை நாட்கள் சனிக்கிழமை களில் வருவதால் வேறு சில நாட் களில் முழு ஊரடங்கு அமல்படுத் தப்படும்.


அதன்படி ஆகஸ்டு 2, 5, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும் அதன் பிறகு 16, 17, 23, 24 மற்றும் 31 ஆகிய தேதி களிலும் என மொத்தம் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.


பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகஸ்டு 31ஆம் தேதி வரை மூடப் பட்டிருக்கும். அவற்றை மீண்டும் திறப்பது குறித்து செப்டம்பர் மாதத் தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.


No comments:

Post a Comment