தந்தைபெரியார்குறித்து அவதூறு பரப்பியவர்மீது காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் கழகத் தோழர்கள் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

தந்தைபெரியார்குறித்து அவதூறு பரப்பியவர்மீது காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் கழகத் தோழர்கள் புகார்


பட்டுக்கோட்டை,ஜூலை 29 பட்டுக் கோட்டை பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த தியாகராஜன் கார்த்திகேயன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் 11-.05.-1953 அன்றைய விடுதலையில் வந்ததாக தந்தை பெரியார் அவர்களை


பற்றி அவதூறாக, உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட் டிருந்தார்.


11-.05.-1953 விடுதலையின் நகலை இணைத்து சம்பந் தப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 25-.07.-2020 அன்று பட்டுக்கோட்டை காவல் நிலை யத்தில் பட்டுக்கோட்டைக் கழக மாவட்டத் தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன் புகார் அளித்துள் ளார்.  பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சிற்பி சேகர், பட்டுக் கோட்டை மாவட்ட ப.க தலைவர் ரெத்தினசபாபதி ஆகியோர் உடன் சென்றனர்.  நடவடிக்கை எடுப்ப தாக காவல் ஆய்வாளரும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment