மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்

புதுடில்லி, ஜூலை29, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்காக நடத்தப்படும் நீட் தேர்வில் மருத்துவ படிப்பு, மருத்துவ மேல்படிப்பு, பல் மருத்துவ படிப்பு, மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.


இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்று நேற்று முன்தினம் (27ஆம் தேதி) தீர்ப்பு வழங்கியது.


இந்த நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக விசாரிக் காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் தரப்பில் நேற்று (28ஆம் தேதி) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 


வருமானம், ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்


கல்லூரிகளில் சேர்க்கை பாதிப்பு


சென்னை,ஜூலை29, பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்விக்காக கல்லூரிகளில் சேரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற் கிடையே கல்லூரிகளில் சேருவதற்கு ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தற்போது சான்றிதழ்கள் பெறும் முறை ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.


அதேநேரம் கரோனா தொற்று காரணமாக பெரும்பாலான இ-சேவை மய்யங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தனியார் இணையதள சேவை மய்யங்கள் மற்றும் செல்போன்கள் மூலமாக மாணவர்கள் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


இதுதொடர்பாக மாணவர்கள் சிலர் கூறும்போது, இணையவழியில் விண்ணப்பித்தால் சான்றிதழ் உடனடி யாக கிடைப்பதில்லை. ஆனால், பல் வேறு கல்லூரிகள், சான்றிதழ்களை சமர்ப்பித்தால் மட்டுமே சேர்க்கை விண்ணப்பங்களை ஏற்கின்றன. எனவே, கல்லூரிகளில் சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும். மேலும்,அரசு அலுவலகங்களில் சான்றிதழ்களை வழங்க தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றனர்.


இதற்கிடையே கரோனா தடுப்பு பணியில் பெரும்பாலான அரசு அதி காரிகள் ஈடுபட்டுள்ளனர். பலர்தொற் றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள் ளனர். குறைந்த அளவிலான பணியா ளர்கள், அலுவலகப் பணிகளை மேற் கொள்வதில் சிரமம் நிலவுகிறது. எனவே, உரியநேரத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment