மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

மறைவு


தமிழக சட்டப்பேரவை மேனாள் தலைவர் முனுஆதி அவர்களின் துணைவியாரும், காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் ஆதிமாறன் தாயாராருமாகிய சந்திரா முனுஆதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (28.7.2020) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர்து உடலடக்கம் தாம்பரம் இடுகாட்டில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.


அவர் மறைவுத் தகவலை அறிந்து அவர் மகன் ஆதிமாறனிடம் தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.


- - - - -


தருமபுரி மாவட்டம் வகுத்துப்பட்டி மாவட்ட இளைஞரணி முன்னாள் தலைவர் த.ஆனந்தன் அவர்களின் தாயார் ருக்கு அம்மாள் (வயது 85) அவர்கள் நேற்று (28-7-2020) அதிகாலை 5 மணியளவில் வகுத்துப்பட்டிப் பண்ணை இல்லத்தில் மறைந்தார். அவரது உடலுக்குக் கழகத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப் பட்டது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பா ளர்கள் மற்றும்  பொதுமக்கள் கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். மாவட்டக் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெய ராமன், தருமபுரி மண்டலத்  தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி துணைத்தலைவர் தீ.சிவாஜி, மெனசி அரங்க திராவிடன், அன்பரசன், வகுத்துப்பட்டி மகேந்திரன், செல்வ ராஜ், பெ.அன்பழகன், நடராஜ், சாமிநாதன், கடத்தூர் ஒன்றியச் செயலாளர் வே.தனசேகரன், ஒன்றிய அமைப்பாளர் இளங்கோ ஆகியோர் ருக்கு அம்மாளின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.


No comments:

Post a Comment