புரோகிதன் இல்லாததே நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் நாம் செய்யும் மற்ற அநேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அர்த்தம். ஆதலால் அதையும் லட்சியம் செய்ய வேண்டியதில்லை. மற்றொரு விஷய மான ஆண் பெண் சமத்துவம் என்கின்ற சுயமரியாதை சிலருக்கு பிடிக்கவில்லையானால், நாம் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. ஆண் பெண் சமத்துவ மாய் பாவிக்கப்பட்டு, சமத்துவமாய் நடத்தப்படுவதாய் இருந்தால்தான் இம்மாதிரி வாழ்க்கை ஒப்பந்தங்கள் அதாவது திருமண காரியங்கள் இருக்க வேண்டுமே ஒழிய அப்படி இல்லாவிட்டால் பெண்கள் "திருமணம் இல்லாமல் தனித்து வாழ்வதே மேல்" என்று சொல்வேன். எதற்காக ஆணுக்கு பெண் அடிமையாக இருக்க வேண்டும்?
- தந்தை பெரியார், 'குடிஅரசு', 13.12.1943
- ‘மணியோசை’
No comments:
Post a Comment