மீண்டும் ஒரு சேரன்மாதேவியா?
செங்கோட்டையில் உள்ள சிருங்கேரி மடத்தில் சம ஆராதனை திட்டம் என்று ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்கள். அதாவது 'பிராமணாள் போஜன'த்தின் மறுபெயர். இது மடத்தின் மேற்பார்வையில் இயங்கும் வேதம் பயிலும் மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்.
அதாவது பிறந்தநாள், திதி, இதர முக்கிய நாட்களில் யார் வேண்டுமானாலும் நன்கொடை கொடுத்து இந்த திட்டத்திற்கு உதவலாம் - இருக்கட்டும்!
என்ன திட்டம்? அவர்களே சொல்லுகிறார்கள்- கவனியுங்கள்.
"கடவுளின்மீது நம்பிக்கையுள்ள யார் வேண்டுமானாலும் இதற்கு நன்கொடை வழங்கலாம்.
Ôபிராமணாள் போஜனம்' என்பது மிகவும் உயர்ந்த நிலைக்குச் செல்ல நாம் செய்யவேண்டிய ஒன்று ஆகும். இதன் பெருமைகள் குறித்து பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது. 'எனக்கு நீங்கள் நெருப்போடு கூடிய மிகப்பெரும் யாகத்தை நடத்தி, என் மனம் குளிர்விக்க முற்படுவதை விட, பிராமணர்களின் மனது குளிர உணவிட்டு, அந்த உணவில் உள்ள நெய் அவர்களின் வாயிலிருந்து வடியும்போது, அந்த உணவு நேரடியாக எனக்குப் படைக்கப்பட்டதாகி விடுகிறதுÕ என்று பாகவத புராணத்தில் கிருஷ்ணன் குறிப்பிடுகிறாராம். (nAhamtathAdmiyajam AnahavirvitAneshch yotadghritaplutamadanhuta bhunkmukhena. yadbrAmhanasyamu khatashcharatOnughAsamtu SHtasyamay yavahitairnijakarmapAkaiH)
ஆனால், இன்றைய காலகட்டத்தில் Ôபிராமணாள் போஜனÕத்திற்குத் தகுந்த மரியாதை கிடைப்பதில்லை. Ôபிராமண போஜனÕத்திற்கு யாரும் சரிவரத் தருவதில்லை. அதாவது, அவர்களுக்கு அதைக் கொடுக்கும் விதிகள் தெரிந்திருக்கவில்லை அல்லது அவர்களுக்கு நேரம் கிடைக்க வில்லை. Ôபிராமணாள் போஜனம்Õ என்பது சிரார்த்தம், மகாளய பட்சம், ஜென்ம நட்சத்திரம், திருமண நாள், திதி கொடுக்கும் நாட்களில் Ôபிராமணாள் போஜனம்Õ கொடுக்கவேண்டியது கட்டாயம் ஆகும்.
நம்மில் பலர் இதை எல்லாம் சரியாகக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.
இதனால் நமது வேதபாட சாலையில் உள்ள பிராமண மாணவர்கள் வேதமந்திரம் முழங்க தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்போடு நடந்து கொள்கின்றனர். அவர்களின் மனது குளிர நீங்கள் அவர்களுக்கு உணவு வழங்க வேண்டும். இது உங்களின் பாவங்களை, கர்மவினைகளை நீக்கும். Ôபிராமணாள் போஜனம்Õ நடத்த 100 அமெரிக்க டாலர்கள் செலவு ஆகும். இதற்கான பணத்தை நீங்கள் செங்கோட்டை சிறீ சாரதாம்பாள் சாரிடபிள் டிரெஸ்ட் என்ற பெயருக்கு அனுப்பவும்.
உங்களது குடும்பத்தாரில்-பெற்றோரின் பிறந்த தேதி, இறந்த தேதி, திருமண தேதி, நீங்கள் பிறந்த தேதி, திருமணத் தேதி, குழந்தை பிறந்த தேதி, ருது ஆன தேதி, மகன் - மகளின் திருமணத் தேதி போன்றவற்றை எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் பஞ்சாங்கத்தின்படி அனைத்துக் காரண காரியங்களைக் கணித்து உகந்த நாளில் உங்கள் குடும்ப நலத்திற்காக யாகங்கள் செய்வோம்.அதற்காக மாதக்கட்டணம் அல்லது ஆண்டுக்கட்டணம் பெற்றுக்கொள்வோம்.
இங்கு சமைப்பவர்கள் அனைவருமே பிராமணாள் மட்டுமே! அவர்கள் கடுமையான ஆச்சாரங்களை கடைப்பிடித்து பிராமண நெறிதவறாமல் வாழ்வோர் ஆவார்கள்.
எங்களது மடம் முழுக்க முழுக்க பொதுமக்களாகிய உங்களின் நன்கொடையில் மட்டுமே இயங்குகிறது. எங்களுக்கு என்று வருமானம் வரும் எந்த தொழிலும் இல்லை. மாணவர்களுக்கும், மடத்திற்கும் நீங்கள் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் நன்கொடைகள் தரலாம்.
ஒரு மாணவருக்கு ஆகும் மாதச் சாப்பாட்டுச் செலவு ரூ.3000. ஆண்டுச் செலவு ரூ.30,000.
உங்களுக்கான யாகம் செய்யும் பிராமண மாணவர்களுக்குப் பால் மட்டும் வழங்க ஒரு நாளைக்கு ஆகும் செலவும் ரூ.350.
காய்கறிகளுக்கான செலவு ரூ.450,
இனிப்புப் பலகாரங்களுக்கான செலவு ரூ.200.
இதர தின்பண்டங்களுக்கான செலவு ரூ.2,000.
இவற்றைக் கணக்கிட்டு எங்களுக்கு ஆன்மீக நம்பிக்கை கொண்ட யார் வேண்டுமானாலும் அனுப்பலாம்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்கள் எந்த அளவுக்கு இரு பிறவிகள் (துவி ஜாதியினர்) - பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்ற ஆணவத்தோடு நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
Ôஇப்பல்லாம் எங்க சார், பிராமணர்கள் பற்றிய பிரச்சினை எல்லாம்?' என்று மேதாவிகளாக Ôவானத்தில் பறந்து பேசும்Õ பேர்வழிகள், செங் கோட்டையில் நடக்கும் இந்த சம ஆராதனையைப்பற்றி என்ன சொல்லு கிறார்கள்?
யார் வேண்டுமானாலும் நன்கொடைகளைத் தாராளமாகக் கொடுக்கலாமாம். ஆனால், போஜனம் மட்டும் பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக்கட்டும் ஏற்பாடு. இதில், நன்கொடையை அமெரிக்க டாலர்களாக வழங்கலாம் என்று கேட்பதன்மூலம் இந்தப் பார்ப்பனக் கொள்ளை உலக அளவில் பெருமளவில் நடப்பது புரிகிறது! சிருங்கேரி மடம் என்ற இந்து மத மடம் யாருக்காக இயங்குகிறது என்பதையும் இதன்மூலம் புரிந்துகொள்ளலாம். பரிதாபத்துக்குரிய பார்ப்பன அல்லாதாரே இந்து மதம் யாருக்காக என்பதையும் புரிந்துகொள்வீர்!
1924களில் வ.வே.சு.அய்யர் நடத்திய சேரன்மாதேவியிலாவது பார்ப் பனர் அல்லாதாரும் சேர்க்கப்பட்டனர். உணவின் தரத்திலும், உட்கார்ந்து சாப்பிடும் இடத்திலும் மட்டும் தனித்தனி ஏற்பாடுகள் இருந்தன.
தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராகவிருந்த தந்தை பெரியாரும், டாக்டர் வரதராஜலுநாயுடுவும் முனைந்து, கிளர்ந்து எழுந்து அதனை ஒழித்துக் காட்டினார்கள்.
95 ஆண்டுகளுக்குப் பிறகு அதைவிட மோசமான - அப்பட்டமான பார்ப்பனத்தனம் படம் எடுத்து ஆடுவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
செங்கோட்டை வட்டாரத்தில், மக்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர் வுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டியது அவசியம். சுயமரியாதை உள்ள எந்த ஒரு பார்ப்பனரல்லாதாரும் ஒரு சல்லிக்காசுகூட இந்த பார்ப்பனக் கொழுப்புச் சித்தாந்தத்துக்கு அளிக்கக் கூடாது! நினைவில் வையுங்கள்.
No comments:
Post a Comment