மன்னை தோழர் மு.அம்பிகாபதி அவர்கள் நேற்றிரவு (14.7.2020) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைந்தோம். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவர். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிறந்த கொள்கையாளர். ஈர்க்கும் வண்ணம் பேசக்கூடியவர்.
திராவிடர் கழகத்தின் தொண்டினை என்றும் சிறப்பித்துக் கூறும் பண்பாளர். எளிமையானவர்.
தஞ்சை மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வழக்குரைஞர் பாரதி, பாலதண்டாயுதம் ஆகிய மகன்களும், மகளும், வாழ்க்கைத் துணைவியர்கள் உள்ள அக்குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகத்திற்கு ஆறுதல் கூறி, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருக்கு திராவிடர் கழகம் தனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.7.2020
குறிப்பு: தோழர் பாரதி அவர்களை இன்று காலை 7.45 மணிக்குத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, இரங்கல் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள்.
No comments:
Post a Comment