உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
ஜெனீவா, ஜூலை 15- சுகாதா ரம் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடை பிடிக்கத்தவறினால் கரோனா பெருந்தொற்று மிக மோச மான உச்சகட்ட அழிவை ஏற் படுத்தும் என்று உலக சுகா தார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அய்ரோப்பிய, ஆசிய நாடு கள் பல கரோனாவைக் கட் டுப்படுத்தும் நடவடிக்கைக ளில் முன்னேற்றம் கண்டுள் ளன.இருப்பினும் இன்னமும் பல நாடுகள் தவறான திசை யில் வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன.
அடிப்படையான முன் னெச்சரிக்கை நடவடிக்கை களை நாம் பின்பற்றாமல் போனால் கரோனா அதன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.இப் போது இருக்கும் நிலைமை யைவிட படுமோசமாக உச்ச கட்ட மோசமான அழிவை ஏற்படுத்தும்.
அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். பரவுதலைத் தடுத்துயிர்களைக் காப்பாற் றுவதை மய்யமாகக் கொண்ட ஒரு விரிவான திட்டத்தை வகுக்க வேண்டும். மக்கள் சமூக இடைவெளி, கை கழு வுதல், முகக்கவசம் அணிவது, தனிமைபடுத்துதல் போன்ற அடிப்படைப் பொது சுகா தாரக் கொள்கைகளைப் பின் பற்றவில்லை என்றால் இந்த நோய் நம்மை மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லும் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment