சென்னை, ஜூலை 15- வட சென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் ‘பெரியாரின் போராட்டங் கள்’ எனும் தலைப்பில் நேற்று (13.7.2020) மாலை 6.30 மணிக்கு காணொலி கருத்தரங்கம் நடை பெற்றது.
சென்னை மண்டல இளைஞ ரணி செயலாளர் இரா.சிவசாமி தலைமையேற்று உரையாற்றினார். மகளிர் பாசறை மாநில அமைப்பா ளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை யாற்றினார். கருத்தரங்கில் புதுவை மாநிலத் தலைவர் சிவ. வீரமணி உள்ளிட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பகுதி தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வினை வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன் ஒருங்கிணைத் தார். இறுதியாக அண்ணாநகர் பகுதி திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment