ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 15, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • இந்திய - சீன எல்லையில் லடாக் அருகே பாங்காங் சோ இடத்தில் இருந்து சீன ராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என இந்தியா கேட்டுள்ளது.

  • திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோயில் திருவாங்கூர் மன்னர் குடும்பத்தார்க்கே சொந்தம் என்றும், கோயிலை நிர் வகிக்க அய்ந்து உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிறுவனங்களில் வாரிசுகள்! மக்களாட்சியில் அரசமைப்புச் சட்டமே. மன்னர்கள் அல்ல. இது குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி கொடுத்த சச்சின் பைலட், துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

  • ராமர் பற்றியும் ராமாயணம் பற்றியும் நிறைய ஆய்வுகள் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியே பிரதமர் ஒளி கருத்து தெரிவித்தார். யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்த அல்ல என நேபாள அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம் மே மாதம் முதல் வாரத்தில் கரோனா தொற்றுக் காரணம் கூறி மூடப் பட்டது. அதனை விரைவில் திறந்திட வலியுறுத்தி, வணிகர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.


- குடந்தை கருணா


15.7.2020


No comments:

Post a Comment