பாட்டாளி  மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் - வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

பாட்டாளி  மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் - வாழ்த்து!


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ச.இராமதாஸ் அவர்களுக்கு, அவரது 82 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, வாழ்த்துக் கடிதத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அனுப்பியுள்ளார்.


அந்த வாழ்த்துச் செய்தியின் விவரம் வருமாறு:


‘‘அன்பிற்குரிய டாக்டர் அவர் களுக்கு,


வணக்கம்! நலம் விழைகிறோம். 82 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா காணும் தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழவேண்டுமென வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.


சமூகநீதிப் போராளியான தங்களின் தொண்டும், உழைப்பும், முன்பு அரும்பாடுபட்டு பெற்ற நமது தலைவர்கள் பெற்றுத் தந்த சமூகநீதியைப் பறிக்கும் முயற்சிகளை முறியடிக்க இப்போதும், எப்போதும் பயன்படும் என்ற விழைவுடன் திராவிடர் கழகம் தங்களை வாழ்த்துகிறது.''


-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட் டுள்ளார்.


குறிப்பு: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் இராமதாசிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து களைத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்


கி.வீரமணி அவர்கள்.


No comments:

Post a Comment