சமூகநீதிக்கு எதிரான ‘‘கண்ணி வெடிகளுக்குப்'' பலியாகாதீர்! பலியாகாதீர்!!
மனுதர்ம ராஜ்யத்திற்கு துணை போகாதீர்கள்!
நாட்டின் மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் தொகை விகிதாச்சாரத்தில் 1980 இல் 52 சதவிகிதம்.
மண்டல் குழு - மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இரண்டாவது குழு! அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது விதியின்படி நியமிக்கப்பட்ட இக்குழு OBC என்ற பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு என பரிந்துரைத்தது வெறும் 27 சதவிகிதம்தான்.
அந்த இட ஒதுக்கீட்டினை 1990 இல் வி.பி.சிங் அரசுதான் அதுவும் வேலை வாய்ப்புக்கு மட்டும்தான் முதல் கட்டமாக அமுல்படுத்த ஆணையிட்டது.
(திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும்,
16 போராட்டங்களையும் இந்தியா முழுவதும் நடத்தி, பிரச்சாரம் செய்த பிறகு)
அதன்பின் 2006 இல் காங்கிரஸ் - தி.மு.க. இணைந்த மத்திய அரசில், அர்ஜூன்சிங் அமைச்சராக இருந்த பொழுது மத்திய கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அரசியல் சட்டப்படி - எல்லாம் நடந்தும்கூட,
2014 ஆம் ஆண்டில் தகவல் உரிமைச் சட்டத்தின்மூலம் கிடைத்த தகவலின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (OBC) உண்மையில் கிடைத்த இடங்கள் வெறும் 12 சதவிகிதமே!
மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோ ருக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் அனைத்தை யும் பார்ப்பனியம் - ஆரியம் கபளீகரம் செய்து கொண்டது - இது தொடர் மோசடி அல்லவா!
52% மக்கள் தொகை உள்ள பிற்படுத்தப்பட் டோருக்கு மருத்துவப் படிப்பில் சட்டப்படி கிடைக்க வேண்டிய (அகில இந்தியாவில்) 27 சதவிகிதத்தில் கிடைத்த இடம் பூஜ்ஜயமே!
எல்லாம் சுவாகா! சுவாகா!
அதற்கு வசதியாக - ஆரியத்தின் ஏகபோகம் -
‘நீட்' தேர்வு!
இதை எதிர்த்து திராவிடர் கழகமும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து முற்போக்கு இயக்கங்களும் சமூகநீதி கேட்டுப் போராடுவதையும், அது இந்தியாவின் பல தலைவர்களின் ஆதரவைப் பெற்று பெருகி வருவதாலும், அதனைத் திசை திருப்பவும்,
கரோனா உள்பட மற்ற பல பிரச்சினைகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் திசை திருப்பவுமே இப்போது ‘உப்பு சப்பற்ற கடவுள், மத பிரச்சினைகளை' ஊதிக் காட்டி, தங்களது ஏக போக சுரண்டலை - பகற்கொள்ளையை ஆரியம் நிலை நிறுத்த பல ‘அவதாரங்களை' ஏவிவிடுகிறது.
புத்தியுள்ள ஒடுக்கப்பட்டோரே உணர்ந்து கொள்ளுங்கள்!
சமூகநீதிக்கு எதிரான ''கண்ணி வெடிகளுக்குப்'' பலியாகாதீர்! பலியாகாதீர்!!
மனுதர்ம ராஜ்யத்திற்கு துணை போகாதீர்கள்!
- திராவிடர் கழகம்
No comments:
Post a Comment