99 ஆம் அகவை காணும் தோழர் என்.சங்கரய்யா வாழ்க! வாழ்க! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 15, 2020

99 ஆம் அகவை காணும் தோழர் என்.சங்கரய்யா வாழ்க! வாழ்க!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர், லட்சிய வீரர் தோழர் என்.சங்கரய்யா அவர்கள் இன்று (15.7.2020) 99 ஆம் ஆண்டு அகவையில் நுழைகிறார் என்று அறிகிற பொழுது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.


வாழ்நாள் எல்லாம் கொள்கை, போராட்டம், சிறைவாசம், தியாகம் என்பதே அவரது வாழ்க் கையின் தடுமாற்றமில்லாத தடங்களாகும்.


அவரது பொது வாழ்வு திராவிடர் கழகத்திலிருந்துதான் தொடங்கியது என்பது பலரும் அறியாத முக்கியச் செய்தி.


முதுமையிலும் மேடை ஏறிவிட்டால், முழக்கம் எப்போதும் கர்ச்சனையாகவே கேட்கும். எளிமையும், பண்பும் அவரது அணிமணிகள்.


தாம்பரம் கழகப் பொறுப்பாளர்களுடன் சென்ற ஆண்டு நேரில் சென்று வாழ்த்துக் கூறினோம்.


பேராசிரியர் க.அன்பழகன், தோழர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கும், திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்கும் திராவிடர் கழகம் பாராட்டு விழா நடத்தியது குறிப்பிடத்தக்கது.


அவரது நூற்றாண்டை அடுத்த ஆண்டு முற்போக்கு இயக்கங்கள் இணைந்து கொண்டாடும்.


திராவிடர் கழகம் அவரை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது.


வாழ்க தோழர் என்.சங்கரய்யா!


 


கி.வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


15.7.2020


No comments:

Post a Comment