எப்போது பள்ளிகளைத் திறக்கலாம்?
- பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள்
புதுடில்லி, ஜூலை 20- கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா அச் சுறுத்தல் கட்டுக்குள் வராததால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற வினா பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு க் கேட்டுள்ளது. கருத்து களை வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆலோசனை சொல்ல மனித வள மேம்பாட்டுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆறு மாவட்டங்களில் மின்சாரக்
கட்டணம் செலுத்த கால அவகாசம்
சென்னை, ஜூலை 20- சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மின்சாரக் கட்டணம் செலுத்த 30ஆம் தேதி வரை கால அவகாசம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட் டங்களில் சில பகுதிகளிலும் உள்ள தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசித் தேதி கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இருப்பின், அவர்களுக்கு கடந்த 15-ஆம் தேதி வரை ஏற்கனவே கட்டணம் செலுத்த கடைசி தேதியாக அறிவிக்கப் பட்டிருந்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்த கடைசித் தேதி மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, வருகிற 30ஆம் தேதிக்குள் கட்டணத்தைச் செலுத்தலாம். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள தாழ்வழுத்த மின் நுகர் வோர் தங்கள் பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட தேதியிலி ருந்து 15 நாட்களுக்குள் கட்டணத்தைச் செலுத்தலாம்.
மின்சாரக் கணக்கீடு தொடர்பாக சில சந்தேகங்களும் பொது மக்களுக்கு விளக்கப்படுகிறது. அதாவது நான்கு மாத காலத் திற்கான மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான விகிதப்படி சமமாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அந்த மின்நுகர்வு இரண்டு மாதங்களுக்கான விகிதப்படி மின்கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கணக்கீடு செய்யும்போது அதில் தனித்தனியே ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, செலுத்த வேண்டிய தொகை கணக்கிடப் பட்டுள்ளது. அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட தொகையில், ஏற் கெனவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் முந்தைய மாத மின் கணக்கீட் டின்படி செலுத்தப்பட்ட தொகையானது கழிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணக்கீடு செய்ததில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக இருப்பின், நுகர்வோரின் எதிர்வரும் கணக் கீட்டில் அந்தத் தொகை சரிசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment