மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 27, 2020

மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கோரிய உயர்நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

திமுக சார்பில் வாதாடிய வழக்குரைஞர் வில்சன் எம்.பி.


சென்னை,ஜூலை27- மருத்து வப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி மாணவர் களுக்கு இடஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சமூக நீதிக்குக் கிடைத்த வெற்றி. இடஒதுக் கீடு வழங்குவதில் சட்ட ரீதி யாகவோ, அரசியல் ரீதியா கவோ தலையிடவில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று திமுக வழக்குரைஞரும், மாநிலங்க ளவை எம்.பி.யுமான வில்சன் தெரிவித்துள்ளார்.


திமுக மூத்த வழக்குரைஞர் வில்சன் எம்பி. இன்று செய் தியாளர்களிடம் கூறியதா வது,


“தீர்ப்பு மிகப் பெரிய வெற்றி. தி.மு.க. தோழமைக் கட்சிகள், ஆளுங்கட்சி அனைவரும் இணைந்து தொடுக்கப்பட்ட வழக்கில் வெற்றி கிடைத்துள்ளது.


தீர்ப்பில் 3 நபர் கமிட்டி அமைக்கப்படவேண்டும், சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவ கவுன்சில் செயலர் ஆகியோர் கொண்ட 3 நபர் கமிட்டியாக அமைக்கப்பட வேண்டும். இந்த கமிட்டி இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து முடிவெடுக்கவேண்டும். 3 மாத்தில் குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள். அகில இந்திய ஒதுக்கீட்டில் இட ஒதுக்கீடு உண்டு. மத்திய அரசு கொடுப்பதில் தடையில்லை எனத் தெரிவித்து உள்ளனர். சட்ட ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ தடையில்லை எனத் தெரிவித்துள்ள னர். மத்திய அரசின் வாதத் தையும், மருத்துவ கவுன்சில் வாதத்தையும் நிராகரித்துள்ள னர். மூன்று மாதம் என்பது இறுதித் தேதி. இது தள்ளிப் போவதால் அடுத்த கல்வி ஆண்டில் இந்த முறையைக் கொண்டு வரவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளார் கள்.


இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் சொன்னால் தான் கொடுப்பேன் என்று இனி சொல்ல முடியாது. என்ன செய்யப்போகிறோம் என்பதை மத்திய அரசுதான் இனி முடிவெடுக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கு பல கேள்விகளை உயர்நீதிமன்றம் வைத்துள்ளது. தமிழகம் எப் போதும் இடஒதுக்கீட்டுக்கு முன்னோடி. இதைக்காண் பித்து மற்ற உயர்நீதிமன்றங்க ளிலும் தீர்ப்பை வாங்கலாம். இலட்சக்கணக்கான பிற்படுத் தப்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு மிகுந்த பயனான ஒன் றாக இது அமையும். அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும்”.


இவ்வாறு வில்சன் தெரிவித்தார்.


 


No comments:

Post a Comment