கோலாலம்பூர், ஜூலை 24 தலைநகரிலிருந்து சுமார் நூற்று அய்ம்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செமந்தான் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் சிறுவர்களுக்கான நூல்கள், பெரியார் வரலாறு, வாழ்வியல் சிந்தனைகள், தமிழ் அறிஞர்களின் நூல்கள் என அய்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் அடங்கிய நூலகம் தோட்ட நிர்வாகிகள் மன்ற(சபா) தலைவரும் பெரியார் மலேசியா பன்னாட்டு அமைப்பின் தலைவருமான மு. கோவிந்தசாமி அவர்களால் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 'கீதையில் காணப்படும் சதுர் வர்ணம்', தலைவர் டாக்டர் கி. 'வீரமணியின் கீதையின் மறுபக்கம்' நூலைப் பற்றியும், பெரியாரின் மலாயா வருகையைப் பற்றியும் நூலக திறப்புரையில் விளக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் நிறைமலி வசந்தா நடேசன், மெந்தகாப் தோட்ட தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் நிறைமலி தே. உமா, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக மன்ற பொறுப்பாளர்கள், பெற்றோர்கள், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் கோ. ஆவுடையார், சின்னையா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Friday, July 24, 2020
Home
மற்றவை
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் மலேசியா அரசு தமிழ்ப்பள்ளியில் (பதினேழாவது) பெரியார் நூலகம் திறக்கப்பட்டது
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் துணையுடன் மலேசியா அரசு தமிழ்ப்பள்ளியில் (பதினேழாவது) பெரியார் நூலகம் திறக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment