அரசு மருத்துவர் காலிப்பணியிடங்கள் விவரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

அரசு மருத்துவர் காலிப்பணியிடங்கள் விவரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

மதுரை, ஜூலை 18- தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு மருத்துவர் பணியிடங் கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


இராமநாதபுரம் வெங் குளத்தைச் சேர்ந்த ராஜு, உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: இராம நாதபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர் கள், ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இந்த காலியிடங்களை குறிப்பிட்ட கால கெடு விற்குள் நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ் வாறு மனுவில் கூறப்பட்டிருந் தது.


இந்த மனு நீதிபதிகள் சத் தியநாராயணன், ராஜமாணிக் கம் அமர் வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ராமநாதபுரம் மாவட்டத் தில் அரசு மருத்துவமனைகளில் 95 சதவீத பணியிடங்கள் நிரப் பப்பட்டுவிட்டதாக தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவ தும் அரசு மருத்து வமனை களில் காலியாக உள்ள மருத் துவர் பணியிடங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக் கல் செய்ய உத்தரவிட்டு விசா ரணையை ஆகஸ்ட் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


No comments:

Post a Comment