பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் ச.இராஜரத்தினம் அவர்களுக்கு வீரவணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில் ச.இராஜரத்தினம் அவர்களுக்கு வீரவணக்கம்


திருச்சி, ஜூலை 19- முது பெரும் வரியியல் வல்லுநரும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் மாண் பமை இணை வேந்தருமான மரியாதைக்குரிய ச. இராஜரத் தினம் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு நாங்கள் பேரதிர்ச்சி அடைந்தோம்!


அள்ளிக் கொடுப்பதற்கு அள்ளிக் கொடுத்தும் கிள்ளிக் கொடுப்பதற்கு கிள்ளிக் கொடுத்தும், அறிவு ஆசான் தந்தை பெரியார் காட்டிய சிக்கன வழியிலும் நமது தமி ழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் மனமறிந்த நிதி யியல் வல்லுநராகவும் செயல் பட்ட மேன்மைக்குரியவர்.


பெரியார் மருந்தியல் கல் லூரியின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக திகழ்ந்தவர்கள்.


கல்வி ஆராய்ச்சி நிர்வாகம் போன்ற அனைத்து செயல் பாடுகளிலும் நிதி சார்ந்த இடர்பாடுகளும், சந்தேகங் களும் ஏற்படும் போது தகுந்த ஆலோசனைகளை வழங்கக் கூடிய மதியுரைஞர் அவர்.


பெரியார் மருந்தியல் கல் லூரியின் நிர்வாக செயல்பாடு களில் பல சவாலான நிதி சார்ந்த இன்னல்களை எதிர் கொள்ள நேர்ந்தாலும் இராஜரத்தினம் அவர்கள் நமக்கு வழிகாட்டுவார்கள் என்ற தைரியமும் மனதிடமும் எங்களுக்கு இருக்கும்.


 அய்யா அவர்களுடைய அறிவு முதிர்வு பெற்ற கனி வான பேச்சுக்களும், கடின மான சூழ்நிலைகளில் அவர் கள் எடுக்கக் கூடிய தேர்ந்த முடிவுகளையும் நினைக்கும் போது இதயம் கனக்கின்றது. இயற்கை பேரிடரினால் ஏற் படும் இன்றைய இக்கட்டான நிதி நிர்வாக சூழலில் நமக்கு வழிகாட்டக் கூடிய இந்த நேரத்தில் அய்யா அவர்களை இழந்திருப்பது மிகவும் துய ரத்திற்குண்டானது.


அய்யா அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.


அவர்களை இழந்து வாடும் கல்விக் குடும்பம், கொள்கைக் குடும்பம் மற்றும் அவர்களது குருதிக் குடும்ப மான புதல்வர்கள் பேரப்பிள் ளைகள் அனைவருக்கும் பெரியார் மருந்தியல் கல்லூரி யின் சார்பில் ஆழ்ந்த இரங் கலையும் மறைந்த இராஜரத் தினம் அய்யா அவர்களுக்கு வீரவணக்கத்தையும் தெரிவித் துக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment