பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ச.இராஜரத்தினம் அய்யா அவர்களுக்கு வீரவணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் ச.இராஜரத்தினம் அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்


தஞ்சை, ஜூலை 19- 18.7.2020 அன்று மறைவுற்ற பெரியார் மணியம்மை அறிவியல் மற் றும் தொழில்நுட்ப நிறுவனத் தின் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) இணைவேந்தர் மற் றும் ஆட்சிமன்றக்குழு உறுப் பினர் டாக்டர் ச.இராஜரத்தி னம் அய்யா அவர்களுக்கு பல் கலைக்கழக சார்பில் வீர வணக்கம் மாலை 3 மணியள வில் செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் அய்யா அவர் களின் உருவப்படத்திற்கு பல் கலைக்கழக மேனாள் துணை வேந்தர் பேரா நல்.இராமச்சந் திரன் அவர்களும் பல்கலைக் கழக பேரா பி.கே.சிறீவித்யா அவர்களும் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.


இதனை தொடர்ந்து மறைந்த இராஜரத்தினம் அவர்களின் நினைவுகளை அவர் ஆற்றிய தொண்டுகளை யும் பேரா நல்.இராமச்சந்தி ரன் அவர்கள் நினைவுகூர்ந் தார்.


பல்கலைக் கழக வேந்தர் அவர்களின் இரங்கல் செய்தி யினை கல்விப்புல முதன்மை யர் பேரா பி.கே.சிறீவித்யா அவர்கள் வாசித்தார். அனை வரும் ஒரு நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத் தினர். பல்கலைக்கழக பேராசி ரியர்கள், பணியாளர்கள் அனை வரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment