இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்குக் கட்டுப்படாதது ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்குக் கட்டுப்படாதது ஏன்

இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுக்குக் கட்டுப்படாதது ஏன்?


மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி


சென்னை, ஜூலை 19- மாநில அரசுகளின் இடஒதுக் கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பட வில்லை? என்று சென்னை உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.


மருத்துவப் படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம்,  தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழக அரசு, புதுச்சேரி அரசு என்று தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27 சத வீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக் கில், சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டால், 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவப் படிப்புகளில் அந்தந்த மாநி லங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்ற அனுமதிக்கலாம். அதேநேரம் அந்த இடஒதுக் கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப் போது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘தமிழ கத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத் திய அரசு 27 சதவீத இடஒதுக் கீடு வழங்குவது தவறானது. தமிழகத்தில் தான் அதிகள வில் பிற்படுத்தப்பட்ட மற் றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஜாதிவாரி யான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 சதவீதத் துக்கு மேல் இடஒதுக்கீட்டை அதிகரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.


எஸ்.சி., எஸ்.டி. பிரிவின ருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது’ என்று வாதிட்டார். “மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது பெருமைக்குரி யது” என்றும் அவர் கூறினார்.


தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், “உச்சநீதிமன்றத் தீர்ப்பு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந் தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். மத்திய அரசு, மருத்துவப் படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே ஆகும். இட ஒதுக் கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட் டது. இடஒதுக்கீடு வழங்காத தால் 2,700-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட தமி ழக மாணவர்களின் இடம் பறிபோனது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டிருக் கிறது’ என்று வாதிட்டார்.


மத்திய அரசு சார்பில் கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜ ராகி, “மருத்துவ மேற்படிப் புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றக் கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடை பெற வேண்டும். அதே நேரத் தில், உச்சநீதிமன்ற உத்தரவின் படியே எஸ்.சி., எஸ்.டி., மாண வர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற் படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற் கான உச்சநீதிமன்றம், பல உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட் டுமே தமிழக அரசுக்கு வழங் கப்படும்” என்று கூறினர்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசுக ளின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்படவில்லை? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், பிற மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் ஆர்.தியாகராஜன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்குரைஞர் கள் நன்மாறன், கே.பாலு, ரிச் சர்ட் வில்சன், தினேஷ், ஸ்டா லின் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.


அனைத்து தரப்பு வாதங் களையும் கேட்டறிந்த நீதிபதி கள், “இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற 27-ந்தேதி பிறப் பிக்கப்படும்” என்று உத்தர விட்டனர்.


No comments:

Post a Comment