சமூக நீதிக்கான போராளி ஆசிரியர் கி.வீரமணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

சமூக நீதிக்கான போராளி ஆசிரியர் கி.வீரமணி

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 18 ஆவது இலக்கியச் சொற்பொழிவு


வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களின் தலைமை உரை



சென்னை, ஜூலை 23- நேற்று (22.7.2020) மாலை 7 மணியளவில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 18  ஆவது இலக்கியச் சொற்பொழிவு  காணொலிமூலம் நடைபெற்றது.


இந்நிகழ்விற்கு வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமை வகித்து உரையாற்றினார்.


அவரது உரை வருமாறு:


எல்லா நாடுகளிலும் நமது தமிழ் மக்கள் வாழு கின்றார்கள். உலகில் இருக்கின்ற அனைத்து மக்களும் நமது சகோதர, சகோதரிகள்.


வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின்


18 ஆவது இலக்கியச் சொற்பொழிவு


இன்று வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 18 ஆவது இலக்கியச் சொற்பொழிவில், காணொலிக் காட்சியில், எங்கள் மதிப்பிற்குரியஎங்கள் குடும்பத்தின் சொந்தக்கார ரான திராவிடர் கழகத் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களுடன் கலந்துரையாட வந்திருக்கிறேன்.


 ‘‘திருக்குறளும் - தந்தை பெரியாரும்‘’


இந்தச் சொற்பொழிவின்  தலைப்பு ‘‘திருக்குறளும் - தந்தை பெரியாரும்" ஆகும். இருவரையும் அறியாத வர்கள் யாரும் இல்லை.


ஒருவர் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவர்; நமது தந்தை பெரியார் அவர்கள் சமீபத்தில் வாழ்ந்தவர். எல்லோரும் பார்த்திருக்கின்றோம்.


அய்யா அவர்கள் இந்த உலகத்தில் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோருக்கும் ஒரு தந்தையாக இருந்து, அவர்கள் தான் வாழ்ந்த காலத்திலே செய்ததை இன்றும் நினைத்துப் பார்க்கின்றேன்.


நானும், அருமை அண்ணாச்சி அவர்களையும், தந்தை பெரியார் அவர்களைச் சந்திக்க பெரியார் திட லுக்கு,சென்றேன். சைதாப்பேட்டை தோழர்கள் அழைத் துச் சென்றார்கள். அப்பொழுது அய்யா அவர்கள் கட்டிலில் அமர்ந்திருந்தார்.


நானும், அருமை அண்ணாச்சி  வி.ஜி.பி. பன்னீர்தாஸ் அவர்களும், அய்யா அவர்களுக்கு வணக்கம் சொன் னோம். அய்யா அவர்களும், வணக்கம் சொல்லி, வாருங் கள் என்று அன்போடு எங்களை அழைத்தார்.


இந்த நேரத்தில் ஒன்றை நான் நினைவுகூர விரும்பு கின்றேன்.


அருமை அண்ணாச்சி திரு.பன்னீர்தாஸ் அவர்களுக் குத் திருமணம் நடைபெற்றது.  எங்களுடைய அண்ணி யார் அவர்கள், அய்யங்கார் வகுப்பைச் சார்ந்தவர். அண்ணாச்சி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர்.


‘விடுதலை’யும் - ‘தினத்தந்தி’யும்தான்


புகைப்படத்தை வெளியிட்டன!


அண்ணாச்சி அவர்களின் திருமணப் புகைப் படத்தை எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பினோம். எந்தப் பத்திரிகையும் போடவில்லை. ஆனால், நம் முடைய ‘விடுதலை’ பத்திரிகையில்  பிரசுரித்தார்கள். ‘தினத்தந்தி’யில் அய்யா ஆதித்தனார் அவர்களும் பிரசுரித்திருந்தார்.


இப்படி எங்களுக்கு ஏறக்குறைய 50, 60 ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு.


அய்யா அவர்கள் சமூக சீர்திருத்தவாதி - அவர் வாழ்ந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் என்றால், ஒதுக்கப்பட்ட மக்கள் என்பார்கள். ஆனால், எல்லோரும் மனிதர்கள்; எல்லோரும் மனிதப் பிறவிகள், எல்லோரும் நம் இனத்தவர் என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்.


அவர் ஒரு புரட்சியாளர். புரட்சியின் மூலமாக எத்தனையோ விதமான செயல்களைச் செய்தார். எல்லா மக்களுக்கும் நன்மை செய்தார்.


ஏழை, பாழை என்று நினைக்காமல், அவர்களுக்காகப் பாடுபட்டார். சீர்திருத்தவாதி! விதவைகள் திருமணம் உள்பட பல சமூகப் பணிகளில் அவர் தன்னை வருத்திக் கொண்டார்.


தந்தை பெரியாரிடம் பயிற்சி பெற்றவர்கள் தான் அண்ணா - கலைஞர் - வீரமணி!


அய்யா அவர்கள் பாணியிலே, நமது பாசத்திற்குரிய  பேரறிஞர் அண்ணா அவர்கள், கலைஞர்  அவர்கள் இப்படி பலர் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தான்.


அய்யா வீரமணி அவர்களும், அந்தப் பாசறையில் பயின்று, இன்று உலகமெல்லாம் அய்யாவின் கொள்கை களைப் பரப்பி வருகிறார்.


அய்யா அவர்கள் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட வில்லை. அவர்கள் நினைத்திருந்தால், சென்னை  அமைச்சராகவோ, மத்திய அமைச்சராகவோ ஆகி யிருக்கலாம். ஆனால், அய்யா அவர்கள் எந்தப் பதவி யையும் தேடவில்லை; தேடி வந்ததையும் ஏற்கவில்லை. அதுபோலத்தான், நம்முடைய அன்பிற்குரிய அய்யா வீரமணி அவர்களும், எந்தப் பதவிக்கும் ஆசைப்படாத வர்.


சமுதாய மக்கள் நன்றாக இருக்கவேண்டும்; நன்றா கப் படிக்கவேண்டும்; நன்றாக உழைக்கவேண்டும். எல் லோரும்  எல்லாம் பெறவேண்டும் என்று நினைப்பவர்.


ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பாக நாங்கள் சிறுவர்களாக இருக்கும்பொழுது, எங்களுடைய ஊரில், ஊர்ப் பொதுக் கிணறு ஒன்று உண்டு. அக்கிணற்றில் எல்லோரும் தண்ணீர் இறைப்பார்கள். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணீர் இறைக்க அனுமதி கிடையாது. நானும், அண்ணாச்சி அவர்களும், அவர் களுக்குத் தண்ணீர் இறைத்துக் கொடுப்போம்.


தந்தை பெரியார் அவர்களை 


நினைக்காதவர்கள் யாரும் இல்லை!


அன்றே ‘‘எல்லோரும் ஓர் குலம்‘’ என்ற எண்ணத் தோடு எங்கள் அண்ணாச்சி வாழ்ந்து வந்தார். இன்று சென்னையில் இருக்கக்கூடிய நமது மக்கள், சகோதரர் கள், அய்யா தந்தை பெரியார் அவர்களை  நினைக்காத வர்கள் யாரும் கிடையாது.


பெரியார் அவர்கள் இல்லையென்றால், சமத்துவம் கிடையாது; ஏழை, எளிய மக்கள் நிமிர்ந்திருக்க முடியாது. இன்றும் சில இடங்களில், கோவிலுக்குள் செல்வதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறது.


ஓராண்டிற்கு முன்பாக நான் திருச்சிக்குச் சென்றிருந் தேன். திருச்சி கோவில் ஜீயர் எனக்கு நன்கு தெரிந்தவர் என்பதால், நான் கோவிலுக்குள் சென்றேன். போகும் வழியில், என்னை பலர் தடுத்தார்கள்.


லுங்கி கட்டிய இஸ்லாமியர்களும், சிலுவை போட்ட கிறித்துவர்களும் உள்ளே போகக்கூடாது என்று சொன்னார்கள்.


சில நண்பர்கள் ஓடி வந்து, இவர் பொதுவுடைமைவாதி - அண்ணாச்சி சந்தோசம் எல்லோருக்கும் சொந்தம் என்று சொன்னார்கள். ஆக, இப்படியும் ஒரு சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இருக்கும் பொழுது, எல்லா மக்களும் எல்லா கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார்.


எல்லா மக்களுக்கும் கல்வி வேண்டும் என்று பாடுபடுபவர் அய்யா வீரமணி


அய்யா வீரமணி அவர்கள் வந்த பிறகு, எல்லோருக் கும் கல்வி வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டார். கல்வி இருந்தால்தான், எல்லா மக்களும் உயர முடியும். அதற் காக, கல்லூரிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் இவற்றையெல்லாம் தனது அருமை மகன் அன்புராஜ் அவர்களோடு இணைந்து மிக அற்புதமாக செய்திருக்கிறார்.


இன்று தந்தை பெரியார் அவர்களை நினைக்காத வர்கள் யாரும் கிடையாது. அமெரிக்காவில், என்னுடைய அருமை மகள் ராணி இருக்கிறார். மருமகன் ஜேசுதாஸ். அவர்கள் அங்கே இருக்கின்ற அய்யா வீரமணி அவர் களின் மகன் அசோக் அவர்களுடைய குடும்பத்துடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள். இப்படி உலக நாடுகளில் உள்ள  எல்லா தமிழர்களும், திராவிடர் கழகம் அமைப் பினால் இன்று கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.


சமூகநீதிக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால்....


அய்யா கி.வீரமணி அவர்களும் ஒரு போராளி. சமூகநீதிக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், அதனை முன்னின்று எதிர்த்துப் போராடி,  வெற்றி பெறுபவர். அதன்மூலமாக எல்லா ஏழை மக்களுக்கும் உதவி செய்பவர்.


ஒன்று, தொழில்.


அவரவர் தொழிலுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.


இரண்டாவது,


எல்லோரையும் அரவணைத்துச் செல்வார்.


யாருக்கும் மாறுபட்டு நிற்கமாட்டார்.


மனிதநேயம் உள்ள ஒரு மாமனிதராக நம்முடைய அய்யா வீரமணி அவர்கள் திகழ்கின்றார்.


கி.வீரமணி அய்யா அவர்கள் உலகிலுள்ள பல்வேறு நாடுகளுக்குச் செல்லும்பொழுதெல்லாம், அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.


மலேசியாவில் திருவள்ளுவர் சிலை திறப்பும் - திருக்குறள் மாநாடும்!


வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் மூலமாக மலேசிய நாட்டில் 2005 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலை ஒன்றை அமைத்தோம். திருக்குறள் மாநாடும் நடை பெற்றது. அந்த மாநாட்டில் அய்யா கி.வீரமணி அவர் களும் கலந்துகொண்டார். மருத்துவர் இராமதாஸ் அவர் களும் கலந்துகொண்டார்.


அய்யா சாமிவேலு அவர்கள், மலேசிய துணைப் பிரதமர் போன்ற பலர் கலந்துகொண்டார்கள்.


வி.ஜி.பி. சகோதரர்கள் எதைச் செய்தாலும், அய்யா வீரமணி அவர்கள் அன்பான வாழ்த்துகளைச் சொல் வார்கள்.


எனது 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும், 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கேற்று என்னை வாழ்த்தியிருக்கிறார்.


சாதாரண ஒரு தமிழன் வளர்வதைக் கண்டு மகிழ்பவர் அய்யா வீரமணி!


இப்படி அவர்கள் வி.ஜி.பி. குழுமத்தோடு இணைந்து, நாங்கள் வளர்வதைப் பார்த்து மகிழ்பவர். ஒரு தமிழன், சாதாரணமாக ஒரு தேநீர்க் கடை வைத்திருந்தவன், வீடு வீடாகப் பேப்பர் போட்டவன்  வளர்ந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தவர்.


காமராசர் அவர்களின் பேரில், தந்தை பெரியாருக்கு மிகுந்த பற்று உண்டு. ‘‘பச்சைத் தமிழர்’’ என்று அவர் பெயர் சூட்டினார்.


இந்த நேரத்தில், இந்தக் காணொலி காட்சி மூலமாக, உலகமெலாம் இருக்கின்ற தமிழ் மக்கள் இந்த நிகழ்ச்சி யைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய அய்யா வீரமணி அவர்கள் வழங்குகின்ற சொற்பொழிவின் தலைப்பு என்னவென்றால், ‘‘திருக் குறளும் - தந்தை பெரியாரும்!’’ என்பதாகும்.


தந்தை பெரியார் அவர்களுக்கும், திருக்குறளுக்கும் ஒரு நீண்ட உறவு இருக்கிறது. அந்த உறவைப்பற்றி அய்யா வீரமணி அவர்கள் விளக்கிச் சொல்வார்.


இந்தக் காணொலி நிகழ்வில் எனது அருமை மகன் ராஜா தாஸ் பங்கேற்கின்றார். அவர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தில் இணைச் செயலாளராக வளர்ந்து வரும்  அன்பான பிள்ளையாக இருக்கிறார்.  அவரையும்,  அய்யா அவர்களையும் வரவேற்று,


உலகிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் இந்தக் காணொலியைப் பார்த்து, அய்யாவின் ஆலோசனை களையும், அவருடைய வாழ்த்துகளையும் பெறவேண் டும் என்று கேட்டு,


அய்யா இப்பொழுது உரையாற்ற அன்போடு அழைக்கின்றேன்.


நன்றி, வணக்கம்!


- இவ்வாறு வி.ஜி.பி. சந்தோசம் அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment