தேசிய அடிப்படை அறிவியல் மய்யத்தின் சுகாதாரமான முகக்கவசம், நானோ சானிடைசர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

தேசிய அடிப்படை அறிவியல் மய்யத்தின் சுகாதாரமான முகக்கவசம், நானோ சானிடைசர்


சென்னை, ஜூலை 23- கோவிட்-19 பெருந் தொற்று காலத்தில் முகக்கவசம் அணிவது என்பது இன்றியமையாத ஒன்றாகி விட் டது. பெரும்பாலான மக்கள் இதை சரிவர கடைபிடிக்காத காரணத்தால் வைரஸ் பரவல் அதிகரிக்கிறது.


சிலர் தாம் வெளியிடும் கரிமில வாயு வையே திரும்ப சுவாசிப்பதால் சுவாசக் கோளாறுகளும், பிற உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.சுவாசிக்க வசதியாக காற்றை வெளியிடும் வால்வு பொருத்தப் பட்ட சிறப்பு முகக்கவசம் ஒன்றை மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி ஆய்வு நிறுவன மான, கொல்கத்தாவில் உள்ள எஸ்.என். போஸ் தேசிய அடிப்படை அறிவியல் மய்யம் உருவாக்கி உள்ளது. கரியமில வாயுவை திரும்ப சுவாசிக்கும் பிரச்சினைக் குத் தீர்வாக இந்த முகக்கவசம் அமைந்து உள்ளது. மேலும் இந்த முகக்கவசம் அணிந்து கொண்டே பேசும் போதும் கூட, குரல் தெளிவாக வெளியே கேட்கும் வண் ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த மய்யம் நானோ-சானி டைசர் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. சானிடைசர்களை அடிக்கடி பயன்படுத் துவதால் தோல் உலர்ந்து போவதை இந்த புதிய சானிடைசர் தடுப்பதுடன் நீண்ட நேரத்திற்கு தூய்மையாகவும் வைத்திருக்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.


No comments:

Post a Comment