ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

ஆசிரியருக்குக் கடிதம்

சிறப்புமிக்க திருக்குறள் உரை


அன்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு:


”திருக்குறளும் பெரியாரும்” தலைப்பில் தங்களது 22.7.2020 உரை மிகச் சிறப்பு. உலகளாவிய அளவில் திருவள்ளுவர் சிலைகள் நிறுவக் காரணமான திரு.சந்தோசம் அவர்களை நீங்கள் பெருமைப் படுத்தியதில் மகிழ்ச்சி.


தாங்கள், வள்ளுவர் சொன்ன ஊழுக்கு பெரியாரது விளக்கம் பெரியாரை நாங்கள் கூடுதலாக புரிய உதவியது. 10 உடைமைகளாக திருக்குறள் சொல்லியதை எடுத்துக் காட்டியது, அவ்வுடைமைகளை நாங்கள் பெறவேண்டுமென்ற ஊக்கத்தை கொடுத்தது. “ஒத்ததறிவான்” என்பதற்கு தாங்கள் sympathy vs empathy என ஒப்பிட்டு காட்டியது, ஆழமாக உள்ளத்தில் பதிகிறது.


”திருக்குறளும் பெரியாரும்” தலைப்பில் தாங்கள் மேலும் பல உரைகள் zoom வழி நிகழ்த்தவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


அன்புடன்,


அரசு, மேரிலாந்து, அமெரிக்கா


 


No comments:

Post a Comment