தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூலை 24, கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்த வர்கள்குறித்த தகவலை தேதி, மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.
காணொலி உரையில் அவர் கூறியிருப்பதாவது:-
3 நாட்களில் கரோனா ஒழிந்து விடும், 10 நாட்களில் கரோனாவை அழித்து விடுவேன் என்று சவால் களை விட்டுவந்த அ.தி.மு.க. ஆட் சியில் கரோனா நோய்த் தோற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 144 ஆகிவிட்டது. நேற்று வரைக்கும் 2,700 பேர் மட்டுமே இறந் துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் ஒரே நாளில் 3 ஆயிரத்து 144 எப்படி ஆனது?.
இதுவரையில் மறைத்துவைத்த மரணங்களை இனியும் மறைக்க முடியாமல் வெளியில் சொல்ல ஆரம் பித்திருக்கிறார்கள். மரணமடைந் தவர் உடல் எவ்வளவுதான் மறைத்தா லும் ஒருவாரத்தில் வெளியே தெரிய ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள். மறைப்பது அரசாங்கமாக இருந்த தனால் 2 மாதம் வரையில் மறைத்து வைத்திருக்கிறார்கள்.
நேற்று முன் தினம் இந்த அரசாங்கம் சொன்ன ஒரு விஷயத்தை என்ன காரணம் சொன்னாலும், நியாயப்படுத்தவே முடியாது. அவ்வளவு கொடுமையான விஷயம் அது. மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதிவரையில் இறந்தவர் எண்ணிக்கையில் 444 மரணங்கள் விடுபட்டுவிட்டது. அதை இன்றைய கணக்கில் சேர்த்துள்ளோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி என்றால் என்ன அர்த்தம்? மார்ச் 1ஆம்தேதியில் இருந்து இன் றைக்கு வரைக்கும் தினமும் பொய் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறார்கள். அதுதான் உண்மை. மரணத்தை இந்த அரசாங்கம் மறைக்கிறது என்று ஜூன் 15ஆம்தேதி அன்றைக்கே நான் சொன்னேன். பீலா ராஜேஷ் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்த வரையில், 236 மரணங்கள் மட்டுமே மறைக்கப்பட்டதாகச் சொன்னார். இப்போது ராதாகிருஷ் ணன் வந்த பிறகு 444 மரணங்கள் இதுவரை மறைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். முதல்-அமைச்சருக்கு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சருக்குப் பயந்துகொண்டு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர்கள் மறைத்துள்ளார்கள்.
மரணத்தை மறைத்தார்கள்; இப் போது மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிக மானதும், வேறுவழியில்லாமல் வெளியில் சொல்லிவிட்டார்கள். இவர்களது அரசியல் லாபங்களுக்கு மக்களைப் பலியிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
தமிழகத்தில் கரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை. கரோனா உயிரிழப்பு விவரத்தை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது பொய் என்று இப்போது அரசாங்க அறிக்கையே மெய்ப்பித்துவிட்டது.
கரோனா பரவத் தொடங்கியது முதல் இன்றுவரை இறந்தோர் பட்டி யலை தேதி வாரியாக, மாவட்ட வாரி யாக வெளியிட வேண்டும். அப்போது தான் பொதுமக்களுக்கு இந்த அர சாங்கம் உண்மையாக இருப்பதாகச் சொல்ல முடியும். கரோனா குறித்த தகவல்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும். சமூகப் பரவல் ஏற் பட்டுள்ளதா?, இல்லையா? பரிசோ தனை எண்ணிக்கையை மாவட்ட வாரியாகக் கொடுங்கள் என்று நான் தினமும் கேட்டேன். சரியான பதில் இல்லை.
கரோனா மரணங்களில் மர்மம் உள்ளது என்பது குறித்து நான் சொன்னபோதெல்லாம் அரசியல் செய்கிறார் ஸ்டாலின் என்று எரிந்து விழுந்தார்கள் தமிழ்நாட்டு அமைச் சர்கள். இப்போது 444 மரணங்கள் வெளியில் வந்துள்ளன. இன்னும் இது போல் எத்தனை மரணங்கள் மறைக்கப் பட்டதோ? என்ற சந்தேகமும் இருக் கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment