தந்தை பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து நெய்வேலி, சிதம்பரத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் :   தோழர்கள் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

தந்தை பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து நெய்வேலி, சிதம்பரத்தில்  கண்டன ஆர்ப்பாட்டம் :   தோழர்கள் கைது


கடலூர் மாவட்டம் நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் நேற்று (17.7.2020) மாலை 4மணியளவில் கோவை சுந்தராபுரம் பெரியார் சிலை மற்றும் திருக்கோயிலூர் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல்,  மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் வேலு, இராமநாதன், மாவட்ட பெரியார் வீரவிளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், ஒன்றியத் தலைவர் கனகராஜ், நூலகர் கண்ணன், கிளைத் தலைவர் பாஸ்கர்,  வடலூர் தி. க. தலைவர் இராவணன், தி.மு.க.கருணாநிதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர்கள் தமிழ்ச்செல்வன்  பாவேந்தர் விரும்பி  தி.மு.க. தோழர்கள் அந்தோணிதாஸ், மணிகண்டரசு,  முருகானந்தம்,  ஆரோக்கியராஜ், சக்திவேல், இளந்திரையன்,  கார்த்திக், சந்தானகிருஷ்ணன்,  தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.



கோவையில் பெரியார் சிலை அவமதிப்பைக் கண்டித்து சிதம்பரத்தில் பெரியார் சிலை அருகில் - கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் தலைமையில் மாவட்ட இணைச் செயலாளர் யாழ். திலீபன் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் - தி.மு.க. சி.பி.எம். தலைமைக்குழு உறுப்பினர் மூசா, சி.பி.அய். நகர செயலர் அன்சாரி, சி.பி.எம். இராசா, விசிக மாவட்டத் தலைவர் பாலஅறவாழி, கு. தியாகு மற்றும் குமராட்சி ஒன்றிய தலைவர் பால்ராஜ், நகர அமைப்பாளர் செல்வரத்தினம், இளைஞரணி தலைவர் அ. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment