அரசுத் துறைகளைத் தனியார் மயமாக்கலுக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 27, 2020

அரசுத் துறைகளைத் தனியார் மயமாக்கலுக்கு

ராகுல் காந்தி கண்டனம்



புதுடில்லி, ஜூலை 27 அரசுத் துறைகளைத் தனியார் மய மாக்கும் பாஜக அரசின் செயல் பாடுகளுக்கு காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


மத்தியில் ஆளும் பாஜக, அரசுத் துறைகளைத் தொடர்ந்து தனியார் மயமாக்கி வருகிறது. இதற்கு அந்தத் துறைகளில் கடும் இழப்பு ஏற்படுவதால் சமாளிக்க முடியவில்லை என அரசு காரணம் தெரிவித்து வருகிறது. ஆனால், விரயத்தில் இயங்குவதாகக் கூறி அரசு விற்கும் துறைகளைத் தனியார் வாங்கி அதைப் பெரும் லாபத் தில் நடத்தி வருவதும் தொடர்ந்து வருகிறது.


இது குறித்து காங்கிரஸ் கட்சி யின் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்தப் பதிவில், ‘‘நாட்டின் வளங்களை மோடியின் நண் பர்களுக்குத் தாரை வார்க்க, பாஜக அரசு சில வியூகங்களைச் செயல்படுத்துகிறது. பொதுத்துறை நிறுவனங்களை நஷ்டமாக்குவது, போட்டியைச் சமாளிக்க இயலவில்லை என்று நண்பர்களின் மூலம் ஊடகத்தில் பிரச்சாரம் செய்வது, சொற்ப விலைக்கு மோடியின் நண்பர் களுக்கு விற்பது” எனப் பதிந் துள்ளார்.


அத்துடன் தனது பதிவில் இந்திய ரயில்வே அமைச்சகம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நிதி இல்லை எனத் தெரிவித்துள்ள செய்தியைச் சுட்டிக் காட்டியுள்ளார்.


No comments:

Post a Comment