வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு  அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு  அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

புதுடில்லி, ஜூலை 16- வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில் லாத அளவு அடுத்த 6 மாதங் களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது விரைவாக பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதை முன்கூட்டியை சரிசெய்ய வேண் டும் என ரிசர்வ் வங்கியின் முன் னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் எச்சரித்துள்ளார்.


2020ஆம் ஆண்டுக்கான இந்திய பொருளாதாரக் கொள் கைகள் குறித்து பொருளாதார ஆய்வுக்கான தேசியக் கவுன் சிலான என்சிஏஇஆ நடத்திய மாநாட்டில் காணொலி வாயிலாக ரிசர்வ் வங்கியின் முன் னாள் ஆளுநர்,பொருளாதார வல்லுநர் ரகுராம்ராஜன் பங் கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:


கரோனா வைரஸ் பரவ லைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த லாக் டவுன் நடவடிக்கையால் ஏரா ளமான தொழில்நிறுவனங்கள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் பெரும் சிக்கலிலும், பொருளா தார நெருக்கடியிலும் இருக் கின்றன. வங்கிகளில் பெற்றக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன.


இப்போதுள்ள வாராக் கடன் அளவை உண்மையில் நாம் உணர்ந்திருந்தால், இப் போதிருந்து அடுத்த 6 மாதங் களில் வங்கிகளில் வாராக் கடன் அளவு இதுவரை கண்டி ராத அளவு மோசமாக அதிக ரிக்க வாய்ப்புள்ளது. நாம் மிகவும் மோசமான சூழலில் இருக்கிறோம், விரைவாக பிரச் சினையின் தீவிரத்தை அடை யாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது நலம்.


மத்திய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் ஜன்தன் வங் கிக் கணக்கின் மூலம் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்று ஜன்தன் வங்கிக்கணக் கின் வெற்றியை பெருமிதம் கொண்டுள்ளார். ஆனால், உண்மையில் பொருளாதார வல்லுநர்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கின் வெற்றி மீது பல்வேறு முரண்பட்ட கருத் துக்கள் இருக்கின்றன.


யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ அந்த குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கு மூலம் நிதியுதவி சென்றுசேர்வதில் பெரும் சிக் கல் இருக்கிறது. நாம் இப்போ தும் உலகளாவியதன்மை குறித் துதான் பேசிக்கொண்டிருக்கி றோம். ஏனென்றால் நமக்கு இலக்கு இல்லை. ஜன் தன் வங் கிக்கணக்கு திட்டம் விளம் பரப்படுத்தும் அளவுக்கு போதுமான அளவு வேலை செய்யவில்லை.


பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வித்துகள், எண் ணெய், தானியங்கள், வெங்கா யம், உருளைக்கிழங்கு ஆகிய வற்றை சேமித்து வைக்காமல் ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது வரவேற்கக் கூடியது தான்.


இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.


No comments:

Post a Comment