ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • அமெரிக்காவில் இணையவழியே கல்வி நடத்தும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் என்றும், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற டிரம்பின் உத்தரவிற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, உத்தரவை டிரம்ப் அரசு கைவிட்டது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • மராத்தா பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளித்திடும் மகாராஷ்டிரா அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஜூலை 27 முதல் தினசரி நடத்திட உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

  • உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனையும் விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதை உச்ச நீதிமன்றம் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:



  • சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தன்னை அடித்து சித்திரவதை செய்ததாக ராஜாசிங் என்பவர் ஏற்கனவே தந்தை மகன் மரண வழக்கில் கைதான காவல் அதிகாரிகள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவரது புகார் குறித்து விசாரித்திட மதுரை நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.

  • ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை பார்க்கும் பணியாளர் களில், திறமை, உடல் நலம் இதனை அளவீடாக வைத்து, அய்ந்து ஆண்டுகள் வரை சம்பளம் இல்லாத விடுமுறை அளித்து அனுப்பிட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • ராமன் பிறந்த இடமான அயோத்தி, நேபாளத்தில் உள்ளது என அண்மையில் நேபாள பிரதமர் கூறியதை அடுத்து, தற்போது இரு புத்த பிக்குகள், தற்போது அயோத்தியில் உள்ள ராமஜன்ம பூமி, புத்த விகாராக இருந்தது என்றும் இது குறித்து யுனெஸ்கோ தலைமையில் ஆய்வு நடத்திட வலியுறுத்தி, அயோத்தியில் மாவட்ட நீதிமன்றம் முன் பட்டினிப் போராட்டம் துவங்கியுள்ளனர்.


தி இந்து:



  • அரசு வங்கிகளில் ரூ.1 கோடிக்கு மேல் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத 2400 பேர்களின் பெயர்களை விரைவில் வெளியிட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் தொகை ரூ.1,40,000 கோடியாகும்..


- குடந்தை கருணா


16.7.2020


No comments:

Post a Comment