பெரியார் கேட்கும் கேள்வி! (46) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (46)


நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்பந்தம்? “பிச் சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளையானான்” என்பது போல எந்த நாட்டிலிருந்தோ இந்த நாட்டுக்குப் பிழைக்க வந்தவன் மத ஆதிக்கம், ஜாதி மேலாண்மை, பொருளாதார ஆதிக்கம், 'மோட்ச' ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் ஆகிய வைகளை பெற்றுக் கொண்டு தம்மைக் கடவுள்கள் என்றும், நம்மை அவர்களது அடிமைகள் வைப்பாட்டி மக்கள் என்றும் ஆதாரப்பூர்வமாகய் சொல்லி அனுபவபூர்வமாய் அடக்கி ஆண்டு வருபவனை மானமில்லாமல் சாமி என்று கும்பிட்டுக் கொண்டு அவன் கால் அலம்பிய தண்ணீரை மோட்ச சாதனம் என்று குடித்துக் கொண்டு திரிவதைவிட நம்மை சகோதரர் களாய் தங்களுக்குச் சமமான மனிதர்களாய்க் கருதும் முஸ்லிம் களிடம் சமத்துவமாய் அளவளாவுவதில் இருக்கும் குற்றம் என்ன என்று அவர்களைக் கேட்கின்றேன்.


- தந்தை பெரியார், குடிஅரசு, 5.12.1937


- ‘மணியோசை’


No comments:

Post a Comment