கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை 31ஆம் தேதி வரை பேருந்துகள் இயங்கத் தடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை 31ஆம் தேதி வரை பேருந்துகள் இயங்கத் தடை

சென்னை, ஜூலை 16- கரோனா பரவு வதைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ கத்தில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.


முழுஊரடங்கு நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் அன்று முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இந்த நிலையில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளா தாரத்தைக் கருத்தில் கொண்டு ஊர டங்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட் டன. அப்போது சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நீங்க லாக மற்ற மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் அரசு பஸ் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.


இதற்கிடையே, அந்த மாவட்டங் களிலும் கரோனா பரவல் அதிகரித் தது. இதற்கு பொதுப் போக்குவரத்தும் ஒரு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் குழு கூறியதால், பேருந் துப் போக்குவரத்துக்கு 15ஆம் தேதி (நாளை) வரை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.


கரோனா பரவலை கட்டுப்படுத்து வதற்காக மாவட்டம் விட்டு மாவட் டம் செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. குடும்பத்தின ரின் திருமணம், மருத்துவ சிகிச்சை, இறுதிச்சடங்கு போன்ற அத்தியாவ சிய காரணங்களுக்கு செல்பவர்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.


மேலும் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் அந்தந்த நிறுவனங் கள் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வர அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர், அலுவலகங்களுக்கு சென்று வருவதற்காக சில அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், பேருந்து போக்குவரத்துக்கு நாளை யுடன் முடிவடைவதாக இருந்த தடையை, வருகிற 31ஆம் தேதி வரை மேலும் 16 நாள்கள் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தர விட்டது.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:-


கரோனா நோய்த் தொற்றை தடுப் பதற்காக, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வா தாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசின் கரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக் கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு நல்க வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment