செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

செய்தித் துளிகள்....

* கரோனா தடுப்புப் பணிக்காக இதுவரை ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.


* ஏழுமலையான் கோவில் மீண்டும் மூடப்படுகிறது - கரோனா தொற்றுக் காரணமாக.


* ராஜஸ்தான் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கருநாடகா சொகுசு விடுதிகளுக்கு மாற்றம்.


* ஞாயிறன்று முழு ஊரடங்கு காரணமாக மதுப்பிரியர்கள் நேற்று டாஸ்மாக்கில் குவிந்தனராம்! (‘குடிமக்கள்' அல்லவா!).


* அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாம்.


* மின்சாரக்  கட்டண விவரத்தை இணைய தளம் மூலம் அறியலாம் (‘ஷாக்' அடிக்கப் போகிறது, எச்சரிக்கை).


* பல்கலைக் கழகத் தேர்வுகளை ரத்து செய்க - வைகோ அறிக்கை.


* கரோனா: 18 ஆயிரம் பேர் குணமடைந்தனர் - மத்திய அரசு தகவல்.


* கரோனா தொற்றுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பலன் அளிக்கின்றனவா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன.


* கரோனா: வெளிநாடுகளில் படித்துக் கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் ஏழரை லட்சம் பேரின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.


* கரோனா: சமூக பரவல்பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.


* தமிழகத்தில் கரோனா தொற்றால் 1500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment