சென்னை, ஜூலை19 தமிழகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத் தின் தலைநகர் சென்னை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் கரோனாவால் பாதிப்பு ஒவ்வொரு நாளும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால், கரோனாவை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக் கின்றனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், பெரும் பாலான பகுதிகளில் இன்னும் நிறு வனங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை. எனவே, வேலைக்குச் செல்ல முடியாமல் தொழிலாளர்கள் பெரும் பொரு ளாதார இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, கரோனா காலத் தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெறுவதற்கு Covid-19 என்ற முறையை மத்திய அரசு இணைத்துள்ளது. மற்ற முறைகளான திருமணம், நோய்வாய்படுதல், வீடு கட்டுதல் ஆகியவற்றின் மூலம் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் பெற 15 நாட்கள் ஆகிறது. இருப்பினும், Covid-19 என்ற முறை யில் பணம் எடுத்தால் 3 நாட்களில் பெற மத்திய அரசு வழிவகை செய் திருந்தது. ஆனால், இதிலும், பல சிக் கல்கள் உள்ளன. வருங்கால வைப்பு நிதி கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் பெயர் ஆகியவை ஆதார் கார்டிலும் இணையாக இருந்தால் மட்டுமே பணம் பெற முடியும்.
இதன் காரணமாக பல தொழி லாளர்கள் பிஎஃப் சேமிப்புப் பணத்தை உடனடியாக எடுத்துப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனை சரி செய்து பணம் பெற தபால் அலுவலகம் அல்லது ஈ-சேவை மய்யம் செல்ல வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கைக் கார ணம் காட்டி இந்த சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொருளாதார இழப்புகளை சரிசெய்ய பிஎஃப் சேமிப்புப் பணத்தை உட னடியாக எடுத்து கொள்ளுமாறு அறி வித்துள்ள மத்திய அரசு, சேவைகளை பெற வேண்டிய சிக்கல்களை சரிசெய் யவுள்ள வழிகளை அடைத்துள்ள தாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசின் இந்த செயல், பிள் ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலாக உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள் ளனர்.
ஊரடங்கு காலத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக மொத்தம் 36.02 லட்சம் கோரிக்கை விண்ணப்பங்களுக்குத் தீர்வுகண்டுள்ளதாகவும், அதில் ரூ.11,540 கோடி வழங்கப்பட்டுள்ள தாகவும் மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment