இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு

கரோனா சமூகப் பரவல் நிலையை எட்டி உள்ளதா?


சென்னை, ஜூலை19 சென் னையில் கரோனா கட்டுப்படுத்தப்பட்டு வரு கிறது என்றும், சமூக பரவல் நிலையை அடையவில்லை என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக கூறி வருகிறது. இந்த நிலையில் கரோனா தொற்று சமூக பரவலை எட்டி உள்ளதா? என் பதைக் கண்டறிய இந்திய மருத் துவ ஆராய்ச்சி கழகம் (அய்.சி.எம்.ஆர்.) நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வை தொடங்கி உள்ளது.


தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை ஆகிய மாவட் டங்களில் இந்த ஆய்வு தொடங்கி உள்ளது. சென்னையில் இந்த ஆய்வை அய்.சி. எம்.ஆர். வழிகாட் டுதலின்படி தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி மேற் கொண்டு வருகிறது. சென்னையில், அதிக பாதிப்புக்குள்ளான இராயபுரம், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய


3 மண்டலங்களில் இந்த ஆய்வு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.


10 நாட்களில், 12 ஆயிரம் பேர் களின் மாதிரிகளை சேகரித்து அதன் மூலம் ஆய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


No comments:

Post a Comment