மாநில ஆளுநருக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்
புதுடில்லி,ஜூலை 28, இராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி திட்டமிடுவதாக அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசின் அதிகாரத்தைப் பயன் படுத்தி, மாநில அரசுகளைக் கலைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கும் நிலையில், ஆளுநர் சட்டசபையைக் கூட்டி ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment