'துக்ளக்' 5.8.2020
இன்று வெளிவந்த இவ்வார 'துக்ளக்' இதழின் கார்ட்டூன் இது.
அதிமுக நிறுவனர் மேனாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உருவச் சிலைக்கு - புதுச்சேரி வில்லியனூரில் காலிகள் காவித்துண்டு அணிவித்தது குறித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாகக் கருத்து கூறியுள்ளார் - எச்சரித்தார்.
"கொலை பாதகர்கள்கூடச் செய்யக் கூசும் அரக்கத்தனத்தில் ஈடுபட்ட கொடிய துரோகிகளின் காட்டுமிராண்டித்தனமான சமூக விரோதச் செயலை அரசு மன்னிக்காது - முன் ஜாமினிலும் வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் தள்ளுவோம்" - என்று முதல் அமைச்சர் கூறி விட்டாராம்.
இப்படிக் கூறியதற்கு 'துக்ளக்' கூட்டம் - குருமூர்த்தி பூணூல் வகையறாக்கள் - கொலை விழுந்தது மாதிரி ஏன் குதிக்கிறார்கள் - இரத்தக் கொதிப்பு ஏற்பட்ட மாதிரி ஏன் பதறுகிறார்கள்?
கந்தசஷ்டிக் கவசத்தைப் பற்றி ஆபாசமாகப் பேசினவனைப் பற்றி இப்படிக் கூறவில்லையாம் - எப்படி இருக்கிறது? முதலமைச்சர் எதைப்பற்றி யாரைப் பற்றி என்ன பேச வேண்டும் என்று குருமூர்த்திகள்தான் முடிவு செய்ய வேண்டுமா? அந்த அளவுக்கு அதிமுகவில் ஆதிக்கம் செலுத்த குருமூர்த்திகளுக்கு அதிகாரம் கொடுக்கப் பட்டுள்ளதா- இடம் அளிக்கப்பட்டுள்ளதா?
எம்.ஜி.ஆர். - அ.தி.மு.க. நிறுவனர். அப்படி இருக்கும் நிலையில் காவி(லி)கள் அவர் சிலைக்குக் காவி அணிவித்தால் ஆத்திரப்படுவது-எச்சரிப்பது அல்லாமல், அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பூங்கொத் துகளால் வருடி விமர்சனம் செய்ய வேண்டுமா?
எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பைக் கண்டு அதிமுக தொண்டர்கள் கொதித்துப் போயிருக்கின்றனர். எந்த அளவுக்கு இந்தக் கொதிநிலை உச்சத்தைத் தொட்டது என்பதற்கு உதாரணம்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நடை பெற்ற விவாதத்தில் பங்கேற்ற அதிமுகவைச் சேர்ந்த கோவை செல்வராசு (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) Òபுரட்சித் தலைவரை அவமதித்தால் பா.ஜ.க.வினர் ரோட்டில் நடமாட முடியாது - எச்சரிக்கை!" என்று பிஜேபியைச் சேர்ந்த ஓர் அரட்டைச் கச்சேரிக்காரரை பக்கத்தில் வைத்துக் கொண்டே உரத்தக் குரலில் பொங்கி எழுந்தார் - கர்ச்சனை செய்தார்.
பா.ஜ.க. ஆசாமியின் முகம் சுருங்கியது - வெளிரிப் போய்விட்டது.
பா.ஜக.வோடு அதிமுக கூட்டு சேர்ந்திருக்கிறது என்பதற்காக பி.ஜே.பி. கூட்டம் திமிர் முறித்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நினைப்பிற்கு, அதிமுகவினர் எதிர்வினை ஆற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
ஏற்கெனவே மதுக்கடைத் திறந்தவர்களை செருப்பாலடிக்க வேண்டும் (எம்.ஜி.ஆர். முதல் அமைச்சராக இருந்தபோது மதுக்கூடங்களை மீண்டும் திறந்தார்) என்று 'துக்ளக்' இதழில் (22.7.2020) எழுதியபோதே அதிமுகவினர் அக்னித் தாண்டவம் ஆடியிருக்க வேண்டும். அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் இப்பொழுது Ôதுக்ளக்' பார்ப்பன பா.ஜ.க. வகையறாக்களுக்கு எம்.ஜி.ஆரும், அதிமுகவினரும் கிள்ளுக்கீரை களாகத் தெரிகிறார்களோ?
அதிமுக தோழர்களே, தொண்டர்களே இந்தக் கும்பலை அடையாளம் காண்பீர்!
No comments:
Post a Comment