முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் வியாசர்பாடி தணிகாசலம் (வயது 91) அவர்கள் மறைந்தார் என்று அறிந்து வருந் துகிறோம். அடக்கமான அருந் தொண்டர் அவர். 'விடுதலை' ஏட்டை நடந்து சென்றே கடை களுக்கும், சந்தாதாரர்களுக்கும் வழங்கிய தொண்டு மனப்பான் மைக்குச் சொந்தக்காரர்.
அவர் தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் முக்கிய இழப்பாகும். அவர் பிரிவால் துயருறும் அவரது வாழ்விணையருக்கும், மகள் மரகதமணிக்கும் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கம்.
- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
28.7.2020
No comments:
Post a Comment