செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 27, 2020

செய்தித் துளிகள்....

* ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியைக் கண்டித்து ஆளுநர் மாளிகைமுன் இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.


* சைபர் குற்றங்களைத் தடுக்க விரைவில் புதிய திட்டங்கள் - சென்னை மாநகர ஆணையர் தகவல் (தடுப்பதற்கு இதுவரை திட்டம் இல்லையோ!)!


* ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கிய நிலையில், மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வற்புறுத்தல்.


* ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, கர்ப்பிணிகளுக்குப் பல சோதனை உள்ளிட்ட பணிகள் முடக்கம்.


* நாடு கரோனா பாதிப்பால் தவித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மத்திய பி.ஜே.பி. அரசு - மாற்றுக் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.


* சென்னையில் 63 விழுக்காடு மரணங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.


* தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடருமா? 29 ஆம் தேதி முடிவு.


* தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் இலவச முகக் கவசம் வழங்கத் திட்டம்.


* சென்னை பொது மருத்துவமனையில் இதுவரை 36 பேர் பிளாஸ்மா தானம்!


* ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் ஒருவர் தனது விவசாய நிலத்தை உழுவதற்கு மாடுகளுக்குப் பதில் தனது இரு மகள்களையும் பயன்படுத்தி ஏர் உழுத தகவல் வைரலாகப் பரவி வருகிறது.


No comments:

Post a Comment