டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:
- இந்திய சீன எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு மூடி மறைப்பது தேச விரோதச் செயல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:
- தி.மு.க. தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், ஓபிசி பிரிவினர்க்கு மருத்துவப் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்க தடையேதும் இல்லை என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பிரதமர் மோடி மனத்தின் குரல் என வானொலி வழியே உரையாற்றிய நிகழ்வில் கார்கில் போர் வெற்றி பற்றி குறிப் பிட்டாரே ஒழிய தற்போது இந்திய-சீன எல்லையில், சீன ஆக்கிரமிப்பு பற்றி பேசவில்லை என தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:
- மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு தருவது தொடர்பாக குழு அமைத்திட சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
- மராத்தியர்களுக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தரும் ஆணை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
- கல்லூரிகளில் இறுதி ஆண்டுத் தேர்வை நடத்திட யு.ஜி.சி. பிறப்பித்த ஆணைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உரிய பதில் அளிக்க யு.ஜி.சி.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
- மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள நோட்டிஸை திரும்பப் பெற வலியுறுத்தி, மேனாள் நீதிபதிகள் லோகூர், ஏ.பி.ஷா உள்ளிட்ட 131 வழக்கறிஞர்கள் உச்ச நீதி மன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
- குடந்தை கருணா
28.7.2020
No comments:
Post a Comment