ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஜூலை25, இராஜஸ்தானில் உடனே சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று காங் கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: சட்டம் மற்றும் அரசியல் அமைப்பின்படி நாட்டில் ஆட்சி நடக்கிறது. மக்கள் உத்தரவுப்படி அரசுகள் அமைக்கப்பட்டு ஆட்சி செய்கின்றன. ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வது தெளி வாகியுள்ளது. இராஜஸ்தானில் வசிக்கும்
8 கோடி மக்களை இழிவுபடுத்தும் செயல் இது வாகும். ஆளுநர் கண்டிப்பாக சட்டமன் றத்தை கூட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நாட்டு மக்கள் மத்தியில் உண்மை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலம் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம்
ப.சிதம்பரம் கருத்து
புதுடில்லி, ஜூலை 25, இந்திய பொருளாதாரத்தில் அய்க்கிய முற்போக்கு கூட் டணி அரசின் முதல் அய்ந் தாண்டு கால ஆட்சி பொற் கால ஆட்சி என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, உண்மைகளை சிந்திக்க மறுக்கும் பா.ஜ.க. நண்பர்களே, கடந்த 2009-2014 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், 2014-2019 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் இடையிலான பொருளாதார செயல் பாடுகளை பாருங்கள் என ஒரு பட்டியலை தமது பதிவில் இணைத்துள்ளார். இரண்டு ஆட்சி களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பா.ஜ.க. நண்பர் களுக்கு உண்மை தெரியும் என்று டுவிட்டர் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment