மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு தொடர் நரபலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு தொடர் நரபலி!

5 குழந்தைகளைக் கொன்ற தந்தை கைது



சண்டிகர்,ஜூலை25, அரியானா வில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் ஜும்மா.  இவர் கூலி தொழிலாளி யாக உள்ளார்.  இவர் கடந்த 5ஆண்டுகளாக மூடநம்பிக்கையின் காரணமாக மந்திரவாதியிடம் சென்று அவர் கூறினார் என்று நரபலியாக குழந்தைகளை கொலை செய்து வந்துள்ளார். தற்பொழுது காவல்துறையினர் அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கடந்த 17ஆம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் எடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இருந்து மற்றொரு மகளின் உடல் கண் டெடுக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, தனது இரு மகள்களையும் கொலை செய்த விவரத்தினை ஒப்பு கொண்டுள் ளார்.  5 ஆண்டுகளுக்கு முன் தனது மூத்த மகனை கொலை செய்துள்ளார்.


இதேபோன்று, தனது மற் றொரு மகன் மற்றும் மகளையும் அவர் கொலை செய்துள்ளார்.  வறுமையால் இந்த கொலைகளை செய்தேன் என அவர் கிராம பஞ்சாயத்தில் கூறியுள்ளார்.


இதனால் கூடியிருந்த கிராம மக்கள் அதிர்ந்து போனார்கள்.  இதன்பின்பு காவல்துறையின ரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு ஜும்மா கைது செய்யப்பட்டார்.  மந்திரவாதி ஒருவர் கூறியதன் பேரிலேயே இந்த கொலைகளை செய்தேன் என ஜும்மா கூறியுள் ளார்.  அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment