எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துணி போர்த்துவதா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துணி போர்த்துவதா

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துணி போர்த்துவதா?


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் எச்சரிக்கை



புதுச்சேரி,ஜூலை25, புதுச்சேரியை அடுத்த வில்லியனூர்- _  விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையில் மர்ம நபர்கள் யாரோ காவித்துணியை போர்த்தியிருந்தனர். அதையடுத்து சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன் ஆகி யோர் சென்று சிலைக்கு முன்பு அமர்ந்து சிலைக்கு காவி துண்டு அணிவித்தவரை தண்டிக்க வேண் டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற மேற்குப்பகுதி காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆர். சிலையில் போடப்பட்ட காவித் துண்டை அகற்றிவிட்டு மாலை அணிவித்தனர். மேலும் வில்லிய னூர் காவல்துறையினர் அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதி வுகளை ஆராய்ந்ததுடன் அருகி லுள்ள பகுதிகளில் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின் றனர். இந்த சம்பவத்திற்கு  தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்தார்.


தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர் மீது புதுச்சேரி அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.


எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துணி அணிவிக்கப்பபட்டதற்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். காவித் துணி அணிவித்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறைக்கும் முதல்வர் நாராயணசாமி உத்தர விட்டுள்ளார். யார் தவறு செய் திருந்தாலும் பாரபட்சமின்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.


No comments:

Post a Comment