ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • அயோத்தியில் ராமன் கோவில் கட்டும் பணி ஆகஸ்டு 3 அல்லது 5ஆம் தேதியில் துவங்கும். அதற்கு பிரதமரை அழைக்கிறோம் என ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் தெரிவித்துள்ளது.

  • பீகாரில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் மாநிலத் தேர்தல் நடத்திட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லிப் பதிப்பு:



  • பீகார் காங்கிரசில் பிற்படுத்தப்பட்டோர் அனைத்து பொறுப்புகளிலும் புறக்கணிக்கப்படுவதாக அக்கட்சியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  • இந்திய சீன எல்லையில் மோடி அரசின் செயல்பாட்டை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கட்டுரை எழுதி யுள்ளார்.

  • நாட்டில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முற்படாமல், மோடி அரசு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளைக் கலைக்கும் வேலையில் ஈடுபடுகிறது என எழுத்தாளர் தல்வீன் சிங் தனது கட்டுரையில் விமர்சித்துள்ளார்.

  • டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பல் மருத்துவ ஆராய்ச்சி மய்யத்தின் மருத்துவர் சக மருத்துவரை ஜாதி சார்ந்து, தரக்குறைவாகவும் நடத்தியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இது குறித்து அமைக்கப் பட்ட டாக்டர் கே.கே.வர்மா தலைமையிலான எஸ்.சி/எஸ்.டி. குழு, எய்ம்ஸ் இயக்குனரிடம் அறிக்கை அளித்துள்ளது.


தி இந்து, டில்லிப் பதிப்பு:



  • இந்தியாவில் ஜாதி இருப்பதுபோல், அமெரிக்காவின் பண்பாட்டிலும் இனம் சார்ந்த (நிறவெறி) பிரச்சினை ஆழ வேரூன்றியுள்ளது என இந்திய அமெரிக்கரான தேஜா (திருநெல் வேலி) தனது கட்டுரையில் கூறியுள்ளார்.


தினகரன், சென்னைப் பதிப்பு:



  • உயர்கல்வித் துறையில் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங் கக் கூடாது. தகுதி அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் வைத்த வாதம் சமூக அநீதி என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • இந்திய-சீன எல்லைப் பிரச்சினையில், மத்திய அரசு, சேவகன் போல இருக்கிறது. இந்த கோழைத்தனத்திற்கு இந்தியா அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என ராகுல் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


டைம்ஸ் ஆப் இந்தியா, டில்லிப் பதிப்பு:



  • உ.பி.யில், மாணவர்கள் இந்திப் பாடத்தில் மிகக் குறைந்த வர்களே தேர்வாகிறார்கள்.

  • இந்தியாவில் கரோனா வைரஸ், சமூகத் தொற்றாக மாறியுள்ளது என இந்திய மருத்துவக் கழகம் எச்சரித்துள்ளது.

  • கரோனா தொற்று காரணமாக, பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறைந்துவிட்டது. சில பள்ளிகள் மூடப்பட்டன. ஆசிரி யர்கள் அன்றாட கூலி வேலைக்குச் செல்கின்றனர்.


- குடந்தை கருணா


19.7.2020


No comments:

Post a Comment