- வேத காலம்- பஞ்ச பூத வணக்கம் (பக்கம் 9)
- இராமாயண காலம் - வீரர் வணக்கம் (பக்கம் 28)
- பாரத காலம் - வீரர் வணக்கம் (பக்கம் 28)
- புராண காலம் - பிர்மா, சிவன், விஷ்ணு என்ற தெய் வங்கள் (பக்கம் 97)
வேத காலத்துக்குரிய ஆச்சாரம் - யாகம்; இராமா யண காலத்துக்குரிய ஆச் சாரம் - தவம்; பாரத காலத் துக்குரிய ஆச்சாரம்- தீர்த்த யாத்திரை; புராண காலத் துக்குரிய ஆச்சாரம் - கோயில் பூஜையே (பக்கம் 87,88).
(கால்டுவெல் எழுதிய தமிழ்நூல் பரத கண்ட புராதனம்).
வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர் சனம் பதிப்பாசிரியர் பெ.வேல்சாமி.
இருக்கு வேதத்திலுள்ள ஆயிரத்து இருபத்தெட்டுப் பாட்டுகளிலும் சிவனென்கிற பெயரில்லை. பார்வதி, உமை யவள், துர்க்கை, காளி முத லான பேர்களுடைய யாரும் அப்போதில்லை. அப் பொழுது பிள்ளையாரும், சுப்பிரமணியனும் இல்லை. வீரபத்திரனும், வயிரபனும், அய்யனாரும் அப்பொழுது இல்லை. அக்காலத்திலே லிங் கமும் தெரியாது. இராமனும், கிருஷ்ணனும் இல்லை. இலட்சுமியும் இல்லை; அனு மாரும் இல்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அப் பொழுது தெரியாது - கயி லாயமும், வைகுண்டமும் அப்போதில்லை.
(பக்கம் 19 -
மேற்கண்ட நூல்)
பாரதத்தில் ஒரு பாகமான உத்தரகீதை எனும் வேதாந் தத்தில் காணக் கிடைக்கும் தகவல்.
‘அக்நிர தேலோத் விஜா தீ நாம்
முநி நாம் ஹிருதிதை வதம்
பர்மாஸ்வ பாபுத்தா நாம்
ஸர்வத்ர ஸமதர்ம சிந
பொருள்: துவிஜதர்க ளுக்கு (இரு பிறப்பாளரான பார்ப்பனருக்கு) தெய்வம் அக்னி; முனிவர்களுக்குத் தெய்வம் இருதயத்தில்; புத்தி குறைந்தவர்களுக்குத் தெய் வம் சிலைகள்; சமபார்வை உள்ளவர்களுக்கு எங்கும் தெய்வம்.
மேலே எடுத்துக்காட்டப் பட்டவைகளிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டி யது என்ன?
கடவுள் என்றால் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரி யாகத்தானே இருக்கவேண் டும் - ஒரே மாதிரியான வழி பாடும்தானே இருந்திருக்க வேண்டும்?
காலந்தோறும் கடவுளும், வழிபாடும் மாற்றம் அடைந் தது ஏன்?
எல்லாம் மனிதர்களின் ‘‘கைச்சரக்குதான்!''
கடைசியாகக் கோவிலில் சிலை வழிபாடு என்பது புத்தி குறைந்தவர்களுக்கு என்று சரணம் பாடிவிட்டார்களே! இந்த உண்மைகளைக் கூறு வது - தந்தை பெரியார் அல் லர் - திராவிடர் கழகத்தவரும் அல்லர்!
பார்ப்பனர்களின் வேதங் களும், இதிகாசங்களும்தான் இவ்வாறு கூறுகின்றன.
சினத்தீயால் சுடாமல் சாந் தமாக அமர்ந்து தீர யோசி யுங்கள் - உண்மை புரியும் - கொஞ்சம் கசந்தாலும்கூட!
- மயிலாடன்
No comments:
Post a Comment