திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொலிமூலம் கடந்த 27.7.2020 முற்பகல் நடைபெற்றது. அக்கூட்டத்தில், ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகத்தான குரல்! அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அனைத்துக் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
தி.மு.க. - பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
திராவிடர் கழகம் - வழக்குரைஞர் அ.அருள்மொழி
காங்கிரஸ் - கோபண்ணா
ம.தி.மு.க. - மல்லை சத்யா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கனகராஜ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - சி.மகேந்திரன்
விடுதலை சிறுத்தைகள் - ரவிக்குமார், எம்.பி.,
இ. யூ. முஸ்லீம் லீக் - அப்துல் ரஹ்மான்
மனிதநேய மக்கள் கட்சி - அப்துல் சமது
கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி -சூர்யமூர்த்தி
இந்திய ஜனநாயக கட்சி - ஜெயசீலன்
No comments:
Post a Comment