புதுடில்லி, ஜூலை 20- கரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தலைநகர் டில்லியில், தற்போது பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளும் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கின்றன. வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கன மழை முதல் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்திருந்தது.
ஆதம்பூர், ஹிசார், ஹன்சி, ஜிந்த், கோஹானா, கானூர், சோனிபட், பாக்பத், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறியிருந் தது.இந்நிலையில் சனி இரவில் பெய்த மழையின் காரணமாக டில் லியில் பல்வேறு பகுதிகளும் வெள் ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக் குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக மிண்டோ பாலத்தின் அடியில் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அப் பகுதியில் சென்ற டிரக் டிரைவர் ஒருவர் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டுள்ளார். இதுகுறித்து டிரக் டிரைவர் கூறுகையில், “இந்த உடல் பாலத்தின் கீழே ஒரு பேருந் தின் முன்புறம் மிதந்து கொண்டி ருந்தது. அதைக் கண்டவுடன் கீழே இறங்கி நீந்தி சென்று மீட்டெடுத் தேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதுபோன்று டில்லியின் ஜாகிர் புரி பகுதியில் 55 வயதான மற்றொரு நபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந் துள்ளார். மிண்டோ பாலத்தின் கீழ் பேருந்து ஒன்று ஞாயிறு காலை வெள்ள நீரில் மூழ்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் பயணித்தவர்களை மீட் டுள்ளனர். மிண்டோ பாலத்தின் கீழ் தேங்கியுள்ள நீர் உட்பட பல் வேறு பகுதிகளிலும் தேங்கியிருக்கும் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
அய்டிஓ மெட்ரோ ஸ்டேஷன் பகுதியில் உள்ள குடியிருப்பு ஓரமாக உள்ள கால்வாயில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தால் வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்படும் வீடியோக் கள் சமூக வலைதளங்களில் வெளி யாகி வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீட்டின் வளாகப் பகுதிகளில் யாரும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.டில்லியில் ஞாயிறு காலை 5.30 மணி வரை, 4.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.
No comments:
Post a Comment