கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை

உயர்நீதிமன்றம் உத்தரவு


சென்னை, ஜூலை 17- கீழ்ப் பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது.  மனநலக் காப்பகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர் கள் உள்ளிட்ட 800 பேருக்கும் பரிசோதனை செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.


கரோனா பரிசோதனை களை ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ் நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தொடரப் பட்ட வழக்கில் உயர்நீதிமன் றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 


No comments:

Post a Comment