ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 17, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல். அய்தராபாத் பதிப்பு:



  • தேர்தல் ஆணையர் அசோக் லவசா ஆசிய வளர்ச்சி வங்கியின் மூத்த அதிகாரியாக அடுத்த மாதம் பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. சென்ற மக்களவைத் தேர்தலில், லவசா நேர்மையாக நடந்து கொண்டதும், தேர்தல் பிரச்சாரத்தில் மோடியின் பேச்சுகள், தேர்தல் நடத்தை விதிகளுக்குப் புறம்பாக இருந்தது என்று அறிக்கை தந்ததும், தற்போதைய மோடி அரசுக்கு உறுத்தலாகவே இருந்தது. அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையராக வரவேண்டிய சூழலில், லவசா வேறு பொறுப்புக்கு மாற்றப்படுகிறார் என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினகரன், சென்னை:



  • மருத்துவப் படிப்பில் 50 சதவீத வழக்கில் சமூக நீதி நிலை நாட்டப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • ராஜஸ்தான் காங்கிரசில் சச்சின் பைலட் மீது கட்சி நட வடிக்கை எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம் பரத்துடன் சமரசப் பேச்சு நடத்தியதாக செய்திகள் வந்துள்ளன.

  • அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், அஸ்ஸாம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளை மறு வரை யறை செய்ய மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கை சட்ட விரோதமானது என தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 50 ஆண்டுகளாக சட்ட ஆலோசகராக இருந்த எஸ்.கே.மெண்டிரிட்டா, தேர்தல் ஆணையர்களுக்குக் கடிதம் எழுதி யுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:



  • திருப்பதி கோயிலில் 14 அர்ச்சகர்கள், லட்டு தயாரிக்கும் 16 பேர், 56 பாதுகாவலர்கள் உள்ளிட்ட 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.


எகனாமிக் டைம்ஸ்:



  • பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் காவல்துறை, ஒரு சார்பாகவும், கலவரத்தைக் கட்டுப்படுத்தாமலும் இருந்தது என டில்லி அரசால் அமைக்கப் பட்ட சிறுபான்மையினர் குழு கூறியுள்ளது. கலவரத்தில் சிறு பான்மையினர் 53 பேர் கொல்லப்பட்டார்கள்.


- குடந்தை கருணா


17.7.2020


No comments:

Post a Comment