கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட தலைவர் ம. சந்திர சேகர் அவர்களின் தலைமையில் குனிய முத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அனுப்புநர்:
ம.சந்திரசேகர்
த/பெ. மருதாசலம்.
கோவை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்,
4/45 , மாணிக்கம் வீதி, குறிச்சி சுந்தராபுரம்,
கோவை 641 024 | செல் 9443377764
பெறுநர்:
உயர்திரு. ஆய்வாளர் அவர்கள்,
D4 குனியமுத்தூர் காவல் நிலையம்
குனியமுத்தூர், கோவை
பார்வை : முதல் தகவல் அறிக்கை எண் 1172/2020. நாள்: 17.07.2020
அய்யா,
பொருள் : குற்ற எண் 1172/2020 வழக்கில் தவறான தகவல்களை பரப்பி காவல் துறை விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் அவர்களது மீது நடவடிக்கை எடுத்தல் - சம்பந்தமாக
கடந்த 17.07.2020 அன்று பார்வையில் காணும் முதல் தகவல் அறிக்கை எனது புகாரின் பெயரில் தங்கள் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு எண்: 1172/2020 பதிவு செய்யப்பட்டது. தந்தை பெரியார் அவர்களின் சிலை மீது சிலர் காவி சாயம் ஊற்றி அசிங்கப்படுத்தியிருந்தார்கள். இத னால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எனது புகாரில் கேட்டிருந்தபடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சம்பந்தமாக போத்தனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த எம். அருண் கிருஷ்ணன் என்ற நபர் காவல் நிலையத்தில் சரண டைந்து தற்போது சிறையிலிருந்து வருகிறார். மேற்படி நபரின் வீட்டில் 22.07.2020 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை சோதனை நடந்ததாகவும் செய் தித்தாள்களில் செய்திகள் வெளி வந்துள்ளது.
மேற்படி சிலை அவமதிப்பு சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் என்பவர் இன்று (24.07.2020) காலை "இந்து தமிழ் திசை - சென்னை பதிப்பு என்ற நாளேட்டில் பக்கம் 5 இல் மறைந்த பெரியார் ஒரு அரசியல்வாதி அவரது கட்சிக்காரர்களே அரசியல் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக பெரியார் சிலை மீது சாயம் பூசியிருக்கலாம்" என்று நேற்று நிருபர்களிடம் பேட்டி கொடுத்துள்ளார் பெரியார் சிலையினை அசிங்கப்படுத்திய நபரே தானாக முன் வந்து சரணடைந்து சிறையிலிருக்கும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை செய்து கொண்டிருக்கும் போது, தேவையில்லாமல் மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் இப்படி பேட்டி கொடுப்பது போலீசார் விசாரணை யில் தலையிடுவதாகவும் வழக்கு விசார ணையை திசை திருப்புவதாகவும் உள்ளது.
மேற்படி மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் சொல்வதுபோல பெரியார் சிலைமீது சாயம் பூசி பெரியாருக்கு விளம்பரம் பெற்றுத்தர வேண்டிய நிலையில் பெரியார் தொண்டர்கள் இல்லை. மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் அவர் களின் கருத்து இந்த வழக்கினை திசை திருப்பும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது இந்த சிலை அவமதிப்பு பிரச்சனை யிலும் மற்ற சிலை சேதப்படுத்தப்பட்ட பிரச்சனைகளிலும் இவருக்கு தொடர்பும் , இவரது தூண்டுதலும் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்.
தமிழ்நாடு முழுக்க சிலை உடைப்பு நடத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்பது மன்னார்குடி ஸ்ரீ செண்ட லங்கார ராமானுஜ ஜீயரின் உள் நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
எனவே அய்யா அவர்கள் இதில் தலை யிட்டு மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார ராமானுஜ ஜீயர் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து மேற்படி குற்ற வழக்கு எண் 1172/2020-இல் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை விசாரணை செய்து அவர்மீது தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
(ம.சந்திரசேகர்)
இணைப்பு: 1. 24.07.2020 நாளிட்ட 'இந்து தமிழ் திசை' சென்னை பதிப்பு
No comments:
Post a Comment