சுயமரியாதை வீரர் மாரியய்யா அவர்களுக்கு நமது வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

சுயமரியாதை வீரர் மாரியய்யா அவர்களுக்கு நமது வீரவணக்கம்!


புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக அவைத் தலைவரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும், முழு சுயமரியாதைக்காரருமான  மானமிகு பே.மாரியய்யா அவர்கள் நேற்று (25.7.2020) காலை காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.


திராவிடர் கழகத்திலிருந்துதான் அவரது நீண்ட நெடிய பொது வாழ்வு கந்தர்வக்கோட்டை கோமாபுரம் பகுதியி லிருந்து தொடங்கியது.


அரசியலில் தி.மு.க.காரரும், சமூகக் கொள்கைகளில் திராவிடர் கழகத்தாராகவுமே இறுதிவரை திகழ்ந்தவர்.


தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், தளபதி மற்றும் நம்மிடமும் அன்பு கொண்டவர்.


பண்புமிக்க கொள்கையாளர் - இயக்கத்தின் மூத்த முன்னோடி; அவரது இழப்பு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அவரது குடும்பத்திற்கும் மட்டுமல்ல, திராவிடர் இயக்கத்திற்கே மாபெரும் இழப்பு.


அவரை இழந்து வாடும் அவரது மகன்கள், மகள்கள், குடும்பத்தினர், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அந்த சுயமரியாதை வீரருக்கு நமது வீர வணக்கம்!


- கி.வீரமணி


சென்னை      தலைவர்


26.7.2020             திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment