முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் திங்கள் சந்தை  பெ.சுப்பிரமணியத்திற்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 26, 2020

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் திங்கள் சந்தை  பெ.சுப்பிரமணியத்திற்கு நமது வீர வணக்கம்!


குமரி மாவட்டம் திங்கள் சந்தையில் இருந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர்  பெ. சுப்ரமணியன் அவர்கள் (வயது 91) நேற்றிரவு (25.7.2020) 8 மணியளவில் கால மானார் என்ற செய்தியை நமக்கு இயக்கப் பொறுப்பாளர் தோழர் வெற்றிவேந்தன் அவர்கள் இன்று (26.7.2020) காலை தெரிவித்தார்.


மிகவும் வருந்துகிறோம். மானமிகு தோழர் திங்கள் சந்தை பெ. சுப்ரமணியன் எப்போதும் கருஞ்சட்டை அணிந்து கழகக் கடமையாற்றிய கொள்கை வீரர். எந்த நிலையிலும் கழகம் போராட்டம் அறிவித்தபோதெல்லாம் தவறாமல் அதில் ஈடுபட்டு சிறைச்சாலைச் செல்லத் தயங்காத கொள்கைப் போர் வீரர். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்.


அவரது இழப்பு அக்குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, நம் இயக்கத்திற்கும் மிகப் பேரிழப்பாகும்.


அவரது துணைவியார், குடும்ப உறுப்பினர்கள் அனை வருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறோம். பெரியாரின் இராணுவக் கட்டுப்பாட்டுடன் உழைத்த அந்த மகத்தான கொள்கை வீரருக்கு நமது வீரவணக்கம்!


- கி.வீரமணி


சென்னை      தலைவர்


26.7.2020             திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment